பக்கம்:அகநானூறு 3, புலியூர்க் கேசிகன்.pdf/235

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மூலமும் உரையும்

புலியூர்க்கேசிகன் ★ 223


சேண்உயர்ந்து ஓங்கிய வானுயர் நெங்கோட்டுக்
கோடை வெவ்வளிக்கு உலமரும் 15

புல்லிலை வெதிரே நெல்விளை காடே.

என் மகளுடைய பெரிதான மடப்பத்தினையான் பாராட்டி மகிழவும், நற்றாய் தன்னுடைய தலைமையினை அறிந்து, தான் தன் மகளுக்குச் செய்யவேண்டிய கடமைகளைச் செய்யவுமாக, முழவின் ஒலிகுறையாத விழவினையுடைய அகன்ற மனை யிடத்தே, திருமணத்தின் வாயிலாக அவளைக் கொண்டானும் அல்லன்!

கற்கள் பிளந்துபோக, மேகக்கூட்டங்கள் பெய்யாது நீங்கிப்போன, உயர்ந்த கொடிகள் பரந்த காடடர்ந்த காட்டு வழி. புள்ளிகளும் இரேகைகளும் பொருந்திய அல்குல் தடத்தினை யுடைய மாமை நிறத்தினளுக்கு, நடத்தற்கு எளிதாயிருக்கும் படியாக வெப்பம் தணிவுற்ற பருவத்து உடன் கொண்டு சென்றானும் அல்லன்!

கடுமையான தன்மையினையுடைய களற்றியானைத் தலைவன், மரம் அசையுமாறு தன் கோட்டினாற் குத்திப் பிளந்து புண்ணுண்டாகச் செய்த, பொரிகள் பொருந்திய அடியினையுடைய ஓமை மரத்தின் பெரிதும் பட்டையுரிந்து விளங்கிய சிவப்பான அடிமரப்பகுதியினை ஊனென்று கருதி, நெடி துயர்ந்து ஓங்கிய கரிய அடியினையுடைய யாமரத்தின் கண் இருந்த பருந்தானது வந்து தங்கும் வானளாவிய உயர்ந்த சிமையங்களையுடைய, வெவ்விய கோடைக்காற்றினாலே அலைந்து கலங்கும் புல்லிய இலைகளையுடைய மூங்கிலில் நெல்விளையும் காட்டினிடத்தே

விரைதலையுடைய கடுமையான காளியினைப்போன்ற அவள் காதலன், அவளையும் உடன்கொண்டு செல்லுதற்குத் துணிந்தனனே! (அவன் செயல் பொருத்தமற்றது; பொறுக்க முடியாதது என்பது கருத்து)

சொற்பொருள்: 2. செம்மல்-தலைமை. கடன்-மணப் பெண்ணுக்குச் செய்யவேண்டிய கடமைகள். 3. முகம் புலரா - ஒலி குன்றாத வியனகர்-அகன்ற மனை. 4.பக-பிளக்க.5 கனமழை - கூட்டமாய மேகங்கள். அழுவம் - காடு. 8. படர்தர - உடன் கொண்டு செல்ல 9துனைதல் - விரைதல், 11 போழ்தல்-பிளத்தல். 12.பொளிதல்-பட்டையுரிதல், சேயரை-சிவப்பாகத் தோன்றிய அடிமரம். 12. இருக்கும்-தங்கும். 15கோடை வெவ்வெளி. வெம்மையுடைய கோடைக்காற்று. உலமரும் அசைந்து வருந்தும். 16.வெதிர்-மூங்கில்,