பக்கம்:அகநானூறு 3, புலியூர்க் கேசிகன்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

56

அகநானூறு -நித்திலக் கோவை


கொண்டிருக்கும் பாம்புகளைப்போலத் தோற்றியபடி, விரைய முடுகிச் செல்லும். இத்தகைய, முல்லை மலருகின்ற மாலைக் காலத்திலே, நகரின்கண் புகுதலை ஆராய்ந்தபடியே நம் பெருந்தகையாகிய தலைவனின் தேரும் செல்வதாகும்.

திருந்திய அணியினையும், பெரிதான மென்மைவாய்ந்த மூங்கிலையொத்த தோள்களையும், மடப்பமான பேச்சினையும் உடைய நம் தலைவியானவள், இன்று விருந்தயர்தலையும் பெறுகின்றவள் ஆவாள் போலும்!

சொற்பொருள்: 1. விருந்து - பசிக்கான உணவென்றில்லாது சிறப்பான உணவு; பிரிவால் நலிவுற்றவள் பெற்றுக் களிக்கப் போகும் பேரின்பச் செவ்வியைக் குறித்தது 4. வளராப் பிள்ளை - வளர்தற்குரிய பார்ப்பு 5. புறவு - காடு. 6. வார் பெயல் - பெருமழை 1. நேமி - தேருருள்.

விளக்கம்: மழையினாலே தோன்றிய புதிய காட்சிகளைக் கூறியது, அங்ஙனம் அவன் சென்றடையத் தலைவியும் புது நலம் பெற்றுப் பொலிவுறுவாள் என்று காட்டுதற்காம்.

மேற்கோள்: தலைவன் மீளுங்கால் தலைவி விருந்து பெறுகுவள் கொல்லென இளையோர் தலைவியின் நிலையினை உரைத்தற்கு, இச்செய்யுளை, ஆற்றது பண்பும் என்னும் சூத்திர உரையிலே காட்டிக் கூறுவர் நச்சினார்க்கினியர்.

325. பழி யாது ஆகுமோ?

பாடியவர்: மாமூலனார். திணை: பாலை துறை: கொண்டு நீங்கக் கருதி யொழிந்த தலைமகன் பிரிவின்கண் தலைமகள் தோழிக்குச் சொல்லியது. சிறப்பு: அள்ளனை நாடுகோள் பணித்த அதியன்; வடக்கின்கண் உள்ள நல்வேற் பாணனின் நல்ல நாடு.

(களவிலே உறவாடிக் களித்த காதலியை முறையாக மணந்துகொண்டு வாழக் கருதிய தலைவன் ஒருவன், அதற்கான பொருளிட்டி வரலின் பொருட்டாக, அவளைத் தேற்றிப் பிரிந்து வேற்றுநாடு சென்றனன் அங்ஙனம் பிரிந்து சென்றிருந்த காலத்துத் தலைவி தோழிபாற் சொல்லியதாக அமைந்தது இச் செய்யுள். தலைமகனின் குறிப்பினை அறிந்த தோழி, தலைமகட்குச் சொல்லியதாகவும் இதனைக் கொள்வர்)

அம்ம வாழி தோழி! காதலர்
'வெண்மணல் நிவந்த பொலங்கடை நெடுநகர்,
நளிஇருங் கங்குல் புணர்குறி வாய்த்த