பக்கம்:அகநானூறு 3, புலியூர்க் கேசிகன்.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மூலமும் உரையும்

புலியூர்க்கேசிகன் ★ 63


கூறப்படும். 10. மா - விலங்கு. தவப்பரிக்கும் - மிக்கு அலைந்து வருந்தும். மரல் - மரற்செடி; ஒரு வகைக் கள்ளி என்பர். 12. செவ்வரை - செங்குத்தான பாறை. 13. உரிவை - உரித்துப் போட்ட தோல். 14. புற்று அரை யாத்த - அரை புற்று யாத்த அடிமரத்தே புற்றுக்கள் கட்டியிருத்தலை உடைய.15 மைநிறம் - இருள்நிறம்; கருநிறம்.16. படுபிணம் - மிகவான பிணம். கவலை - கவர்த்த வழிகள். 18. கோல் அம்பு.

விளக்கம்: 'இன்பம் புணர்வு; அது நண்பகல் போன்றது; இடும்பை பிரிவு; அது இரவு போன்றது என்க, இவை ஒன்றற்கொன்று எதிராக அமைந்து விளங்குவன. இவற்றுள் இன்பத்தே இருக்கும் நீ துன்பத்தை நாடிச் சென்று பொருளார் வத்தால் அடைதலையும் நினைவாயோ என்பவன், 'துன்னலும் தகுமோ' என்றனன். சென்றபின் 'நினைதலும் செய்தியோ? என்றது, தான் செல்ல விரும்பாததனை உணர்த்தியதாம். ஆறலைப்போர் அம்பெய்து வழிச் செல்வாரைக் கொன்று பறித்துவிட்டு, அவருக்காக இரக்க மின்றிக் கழிந்த அம்புக்காக இரங்குவர் என்று, அவர்தம் ஆறலைக்குங் கொடுந்தன்மையினை நன்கு கூறியவாறு காண்க.

328. அடக்கி இருப்போமோ!

பாடியவர்: மதுரைப் பண்டவாணிகன் இளந்தேவனார்: ஈழன்தேவனார் எனவும் பாடம். திணை: குறிஞ்சி, துறை: இரவுக்குறிச் சிறைப்புறமாகத் தோழி சொல்லெடுப்பத் தலைமகள் சொல்லியது.

(ஒரு தலைவனும் தலைவியும் தம்முட் கண்டு காதலித்துக் களவிலே உறவாடி வருகின்றனர். அவர்கள் இரவுக்குறியிடத்தே கூடிவந்த காலத்தே, ஒரு நாளிரவு தலைவியும் தோழியும் தலைவனுக்காக வந்து குறித்த இடத்தே காத்திருக்கின்றனர். குறித்த நேரம் கழிந்தும் அவனை வரக்காணாத தோழி, அதனைப்பற்றிக் கேட்க, அப்போது, அவளுக்குத் தலைவி தன் உள்ளத்து நிலையினைச் சொல்லுந் தன்மையிலே அமைந்தது இச்செய்யுள்)


வழையமல் அடுக்கத்து வலனேர்பு வயிரியர்
முழவதிர்ந் தன்ன முழக்கத்து ஏறோடு
உரவுப்பெயல் பொழிந்த நள்ளென் யாமத்து
அரவின் பைந்தலை இடறிப் பானாள்
இரவின் வந்தெம் இடைமுலை முயங்கித் 5


துணிகண் அகல வளைஇக் கங்குலின்
இனிதின் இயைந்த நண்பவர் முனிதல்