பக்கம்:அகநானூறு 3, புலியூர்க் கேசிகன்.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மூலமும் உரையும்

புலியூர்க்கேசிகன் * 87




நீள ஒழுகிய குருதியுடன் தொங்கிக்கிடந்த அப் பார்ப்பானின் குடரினைக் கடித்துத் தின்றபடியே, வரிகளைக் கொண்ட மரலினையுடைய நெறியிடத்ததான ஒர் ஆண் நரியானது, வெண்மையான பரற்கற்கள் மின்னிக்கொண்டிருக்கும், கண்களைப்பறிக்கும் கவர்த்த நெறியின்கண்ணே, கள்ளி மரத்து நிழலின் கீழே? கூக்குரலிட்டதாகத் தங்கியிருக்கும்.

மழை பெய்யாது ஒழிந்த, வெம்மை மிகுந்ததான, அத்தகைய காட்டுவழியாகிய, கடத்தற்கு அரிதான இடத்திலே, முன்பொருகால்-

'நடுக்கத்தை விளைவிக்கும் இரவுப்பொழுதிலே, பெருத்த ஆரவாரத்தைக் கொண்ட மேகங்கள் திரண்டு மழைபொழிய, அதனால் மிக்க குளிரோடு கூடிய வாடையும் வந்து வீசுதலால் நம் காதலி நம்மை நினைந்து வருந்துவாள் அல்லளோ? என்று கூறினாயாக, எம்மைத் தனியேவிட்டு நீ திரும்பிவிட்டனை அல்லையோ? (நின் உறுதியை நம்பி, இனியும் யாம் அவளைப் பிரிதற்குத் துணியோம் என்பது கருத்து.)

சொற்பொருள்: 1. சாரல் - மலைச்சாரல். யா அத்து - யா மரத்து. குழைத்த - துளிர்த்த. 2. மாரி ஈர்ந்தளிர் - மாரிக் காலத்திலே தழைக்கின்ற தண்ணிய தளிர். 3 புலம்பு - வருத்தம். 3. ஒழிய - அழகு கெட, இது, கண்கள் நீர் சொரிதலால் வந்துறுவதாம். 5. உமணர்-உப்பு வாணிகர்.6.கண நிரை - பொதி; சுமக்கும் கழுதை, நிரைகள் குறும் பொறை - குறும்பாறைகள். 7.தூது ஒய் பார்ப்பான் - தூது செல்லும் இயல்புடைய பார்ப்பான். 8. படை - ஆயுதம் கொலைக் கருவி; 9.வில்லும் அம்புமாம். 10. வருதிறம் - வரும் தகைமை. 11. தடிந்து - கொன்று, கடுங்கண் - கொடுமை.12. திறனில் சிதாஅர் - உடுக்கும் தகுதியற்ற சிதைந்த கந்தலுடை 16. இமைக்கும் - மின்னும் கவலை - கவர்த்த நெறி.18. கண்மாறிய - பெய்யாது போகிய 20. பெருங்கலி வானம் - பெருத்த ஆரவாரத்தையுடைய மேகம்; 'திரண்ட மேகங்கள் இடிமுழக்கம் உடையவாய்' என்பது பொருள்.

விளக்கம்: இதனால், 'தலைவியைப் பிரிந்து செல்லுதற்கு மனமின்றி, அவன் தான் செல்லுதலைக் கைவிட்டனன்’ என்று கொள்ளுக. 'பொருள் அவனதாக எனவும், 'வாடையொடு வருந்துவள்’ எனவும் கூறி, ‘என்னைத் தனியே கை விட்டு நீ அன்றைக்கு மீண்டாயல்லவோ' என்றனன், தன் உள்ளத்து உறுதியற்ற தன்மையினையும் கூறினான். கைப் பொருள் அற்ற பார்ப்பானையும் கொன்ற மழவர், பொருளுடன் வரும் தன்னைத் தவறாது கொல்லுவர் என்ற கருத்தினைப் புலப்படுத்திக்,