பக்கம்:அகமும் புறமும்.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

92 • அகமும் புறமும்


வள்ளுவப் பெருந்தகை வகுத்த அக வாழ்வின் சில சிறந்த பகுதிகளை இதுகாறுங்கண்டோம். சிறந்த முறையில் வாழவேண்டும் என்று அவர் இலக்கணம் வகுத்ததற்கேற்ப பழந்தமிழ் நாட்டில் சிலரேனும் வாழ்ந்திருத்தல் கூடும். அவ்வாறு வாழ்ந்தவர் வாழ்வை ஒட்டி இலக்கியம் தோன்றிற்று. அகநானூறு, குறுந்தொகை, நற்றிணை முதலிய நூல்கள் சிறிய பாடல்களின் மூலம் இவ்வகவாழ்வின் ஒவ்வொரு பகுதியைச் சிறப்பித்தன. அந்நூல்களுள் அதிகம் பயிலப்படாத ஒரு நூல் நற்றிணையாகும். எனவே அகவாழ்வின் ஐந்து திணைகட்கும் சில உதாரணங்கள் அந்நூலிலிருந்து எடுத்துத் தரப்பட்டுள்ளன. அவையே அடுத்து அமையும் ‘இலக்கியத்தில் வாழ்வு’ என்னும் தலைப்பில் காணப் பெறுபவை.