பக்கம்:அகமும் புறமும்.pdf/201

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இலக்கியத்தில் வாழ்வு • 193

தங்கின் எவனோ தெய்ய பொங்குபிசிர்
முழவுஇசைப் புணரி எழுதரும்
உடைகடல் படப்பைஎம் உறையின் ஊர்க்கே?
(நற்றிணை–67)


[மால் வரை–பெரிய மலை; துறை புலம்பின்றே – கடற்கரையில் ஆள் நடமாட்டம் இல்லை; இறவு–இறால்; வெண்குவட்டு–உப்புக் குவட்டில்; அருஞ் சிறைத்தாஅய்–அரிய சிறகை வீசிப்பறந்து; இறை–தங்குதல்; கணைக்கால்–கொழுத்த தண்டு; எல் இமிழ்–இரவு சூழ்ந்த; முழவு–மத்தளம்; உடை கடல்–அலைகள் மேல் எழுந்த வீழ்ந்து உடைகிற கடல்]

திருமணம் ஆவதற்கு முன் தலைவியின் வீட்டில் தங்கிச் செல்லாம் என்று கூறுவது இயலாத காரியம் என்பதைத் தலைவன் அறிய மாட்டானா? தோழிக்கும் அது தெரியாதா? இருவருக்குமே நன்கு தெரியும். ஆனால், ஏன் தோழி இவ்வாறு கூறினாள்? இவ்வாறு கூறுவதன் உட்பொருளை நன்கு அறிந்தாவது தலைவன் மணம் செய்துகொண்டு வீட்டில் தங்கமாட்டானா என்ற எண்ணம்தான்?

கடல் துறையில் யாரும் இல்லை என்றதனால் அவன் மீண்டு போகும்பொழுது கள்வரால் இடைஞ்சல் ஏற்படக்கூடும் என்பதைக் குறிப்பிட்டாள். நாரைகள்கூட மாலைக் காலத்திலே தம் பேடைகளோடு கூட்டில் உறையச் செல்கின்றன என்ற குறிப்பால், ‘ஆண் மகனாகிய நீ இன்னும் மணம் செய்துகொண்டு குடும்பம் வைக்காமல் தனிவாழ்க்கையில் களவே சிறப்பென்று கருதி வாழலாமா?’ என்றும் இடித்துக் கூறினாள். கேவலம் கொல்லுதலையே தொழிலாகக் கொண்ட சுறாகூடத் தன் துணையுடன் வாழ்கிறதென்று எடுத்துக்காட்டுதலில் எவ்வளவு எள்ளல் குறிப்பைப் பெய்துவிடுகிறாள் அத்தோழி. ‘எம் சுற்றத்தார்-