பக்கம்:அகமும் புறமும்.pdf/257

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நாட்டு வளமும் மக்கள் வளமும் • 249

தயிர் கடையும் ஓசை எழுகிறது. குடைக்காளான் போல குமிழியிட்டு, இறுகிய வெண்பாறை போல் கிடந்தன தயிர்க்குடங்கள். தயிர்க் கடைந்து, திரளும் வெண்ணெயைத் தனித்து எடுத்து வைத்து கடைந்த போது தெளித்த தயிர்ப் புள்ளிக் கோலம் கொண்ட மோர்ப்பானையை பூவால் செய்த சும்மாட்டின் மேல் வைத்து வீடு நீங்கி, வெளிச் சென்று, காலைப் பொழுதிலேயே மோர் விற்கிறாள் இவ்வாய்க்குல மடந்தை. மாந்தளிர் மேனி; தாளுருவி அசையும் காது, மூங்கில் போல் திரண்ட தோள், குறிய கூந்தல் உடைய இவள் மோர் விற்று, பண்டமாற்றாகப் பெற்ற நெல் முதலானவற்றால் சுற்றத்தினரை உண்பிக்கிறாள்;

ஆனால் காய்ச்சிய நெய்யை விற்றுப் பெற்ற தொகை கொண்டு, பசும்பொன் வாங்கவில்லை. மாறாக பால் எருமை, பசுங்கன்று, எருமைக்கன்று இவற்றில் முதலீடு செய்கின்றாள்.]

மேலே காட்டிய இடைக்குல மடந்தையின் வாழ்க்கை நடுத்தர மக்களின் வாழ்க்கைக்கு ஓர் உதாரணமாக அமைகின்றது.

அன்றைய பெண்கள், நிறைந்த உழைப்பினராக இருந்தனர் என்பதும், மிக்க விடியற்காலத்திலேயே எழுந்து தம் அன்றாடக் கடமைகள் மேற்கொண்டனர் என்றும், நள் இருள் விடியல் புள் எழப் போகி என்ற தொடர் வழி விளக்குகின்றார், அளை விலை உணவின் கிளை உடன் அருத்தி என்றமையால் மோர் விற்ற தொகை கொண்டே சுற்றத்தவருக்கும் சேர்த்தே உணவு அளிக்கின்றாளாம்.

உறை அமை தீம் தயிர், புலிக்குரல் மத்தம் ஒலிப்பக் கடைந்து எடுத்த வெண்ணெயை நெய் ஆக்கி விலைக்கு விற்கின்றாள். மோர் வாணிபத்தால் கிடைக்கும் ஊதியத்தை விடநெய் வாணிபத்தில் மிகுதியான ஊதியம் பெறலாம் என்றாலும் நெய் விற்ற பணத்தைப் பொன்னாக