பக்கம்:அகமும் புறமும்.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



முன்னுரை

இந்நூலின் முதற்குறிப்பு அகம் ஆகும்.

பழந்தமிழனுடைய ஒப்பற்ற குடும்ப வாழ்க்கை பற்றிக் கூறுகிறது இப்பகுதி. ஒரு சமுதாயத்தார் சிறந்த நாகரிகமும் பண்பாடும் பெற்றுச் சிறந்து வாழ்ந்தனர் எனில், அதன் அடிப்படை அவர்களுடைய குடும்ப வாழ்விலேதான் காணப்பெறும். வீட்டில் நல்வாழ்வைப் பெறாத சமுதாயம், வெளியில் சிறந்த வாழ்வைப் பெறுதல் என்பது வேரில்லாத மரம் தழைத்தது என்பது போலத்தான். அகவாழ்வு நன்கு சிறவாமையாலேதான் ரோம, கிரேக்க, எகிப்திய நாகரிகங்கள் இன்று சரித்திரத்தில் மட்டும் இடம் பெறும் நிலையை அடைந்துவிட்டன. எனவே, பழந்தமிழர் நாகரிகத்தின் ஆணி வேராய் விளங்கிய அகவாழ்வை மூன்று பிரிவாகக் காண்கின்றது இப்பகுதி.

அகம்’ என்பதன் அடிப்படையும், மனத்தத்துவமும், குறிக்கோளும் பயனும் ஆயப்படுகின்றன. உலகுக்கு ஒரு பொது மறையாகிய குறள் கருத்துப்படி அமையும் இல்வாழ்வு எத்தகையதாய் அமைதல் வேண்டும் என்பதைக் காண்பதே அடுத்த பிரிவு. இந்த இரண்டு இலக்கணங்களையும் கொண்டு சில அகப்பாடல்கள் ஆயப்படுகின்றன மூன்றாம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அகமும்_புறமும்.pdf/5&oldid=1347528" இலிருந்து மீள்விக்கப்பட்டது