பக்கம்:அகராதி ஆய்வுமலர் 2019.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

பன்னீர்செல்வம் துணை முதலமைச்சர் வாய்மையே வொவும் வாழ்த்துச் செய்தி தலைமைச் செயலகம் G60T600601 - 600 009 Go.14.2.2020..... தமிழ் என்று தோள்தட்டி ஆடு! - நல்ல தமிழ் வெல்க, வெல்க, வென்றே தினம் பாடு!' - பாவேந்தர் பாரதிதாசன் உலக முதன் மொழி, உயர்தனிச் செம்மொழி, பழமைக்கு விளக்கம் தரும் மூத்த மொழி, புதுமைக்கும் பொருள் கூறும் இளமை மொழி, அதுதான் நம்முடைய அருமைத் தமிழ் மொழி! தமிழ் மொழியின் அருமை பெருமைகளை உலகறியச் செய்ய உழைத்த பெருமக்கள் பலர் ஆவர். அவர்களில் தமிழகம் சார்ந்த பெரியோர் மட்டுமன்றி, மேலைநாட்டினின்று வந்திறங்கிய மேனாட்டாரும் அடங்குவர். அவர்கள் ஆய்வு முயற்சியும், அரிய தமிழ்த் தொண்டும் தமிழின் பெருமைகளை உலகம் உணர பறை சாற்றியது. தமிழ்த் தொண்டை சிரம் மேல் ஏற்று, தமிழின் புகழை உச்சத்திற்கு உயர்த்திட உழைத்த, மேனாட்டு அறிஞர்களில் சிறப்பாகக் கூறத்தக்கவர்கள் இராபர்ட் கால்டுவெல் அவர்களும், கான்ஸ்டன்டைன் ஜோசப் பெஸ்கி அவர்களும் என்று குறிப்பிட்டுச் சொல்லலாம். அறிஞர் கான்ஸ்டன்டைன் ஜோசப் பெஸ்கி அவர்கள், தமிழ் பழுதறக் கற்று, தேம்பாவணி, திருக்காவலூர்க் கலம்பகம், கித்தேரியம்மன் அம்மானை போன்ற இலக்கிய நூல்களைப் படைத்தும், சதுரகராதி போன்ற அகராதிகளைத் தொகுத்தும் தொண்டாற்றியதோடு, “பெஸ்கி" என்னும் தனது இயற்பெயரைத் தமிழ் பற்றின் காரணமாக, “தைரியநாதசாமி" என்று தமிழில் மாற்றிக் கொண்டார்.