பக்கம்:அகராதி ஆய்வுமலர் 2019.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

2 பின்னர், அப்பெயரினையும் தூய தமிழ் வடிவமாக்கி, "வீரமாமுனிவர் என மாற்றிக்கொண்டார். தமிழ் அகராதி வடிவில் வந்த முதல் நூல் சதுரகராதி. அதனைத் தொகுத்த வீரமாமுனிவர் தமிழ் அகராதியியலின் தந்தை' என்று போற்றுகிறோம். அவரது பிறந்த நாளான நவம்பர் 8-ஆம் நாளை தமிழ் அகராதியியல் நாளாக ஆண்டுதோறும் கொண்டாடவும், அவரது பெயரில் விருது ஒன்றை வழங்கவும் மாண்புமிகு அம்மா அவர்களது அரசு ஆணையிட்டுள்ளது. தமிழ் அகராதியியல் நாள் நிறைவு விழாவில் தமிழ் அகராதி குறித்த அரிய கருத்துப் பெட்டகம் ஆய்வு மலர் ஒன்றை வெளியிடுவது அறிந்து மட்டற்ற மகிழ்ச்சி அடைந்தேன். இச்சிறப்பு மலரை வெளியிடவிருக்கும் செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்கத்தின் பணி மிகவும் பாராட்டுக்குரியது தம் வாழ்நாள் முழுவதும் அயராது உழைத்து, தன் பன்மொழிப் புலமை யாலும் பல்துறை அறிவியல், ஆராய்ச்சி வன்மையாலும் அருந்தமிழின் ஆக்கம் பெருக்கி, அதற்கொரு புத்தொளியூட்டித்தமிழர்தம் பெருமையை உயர்த்திய தேவநேயப்பாவாணர் ஆய்வு நெறியின் அடிப்படையில், தமிழின் பெருமைகள் தேடித்தேடித் தொகுக்கும் பணியான அகரமுதலி பணியைச் சீரும் சிறப்புமாகச் செய்துகொண்டிருக்கும் செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்கத்திற்கு எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககம் இன்னும் பெருமை பெற்றுச் சிறந்து விளங்கிட வாழ்த்துகிறேன். இந்த இயக்கம் வீறுடன் செயல்பட மாண்புமிகு இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மாவின் அரசு என்றென்றும் துணை நிற்கும் என்று தெரிவித்து, விழா சிறக்கவும், விழா மலர் மலர்ந்து தமிழ் மணம் பரப்பவும் மனமார வாழ்த்துகிறேன். பள்ளீர்செய்வம் வி. பண் ஓ. பன்னீர்செல்வம்