பக்கம்:அகராதி ஆய்வுமலர் 2019.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(Upload an image to replace this placeholder.)

க.பாண்டியராஜன் தமிழ் ஆட்சிமொழி, தமிழர் பண்பாடு மற்றும் தொல்லியல்துறை அமைச்சர் ாடு வாய்மையே வெல்லும் வாழ்த்துரை தலைமைச் செயலகம் Gl 601 601601 - 600 009 நாள் : 04.2.2020 "இனிமையும் நீர்மையும் தமிழ் எனலாகும்" பிங்கலந்தை ஒரு மொழியில் சொற்களின் பயன்பாடு இன்றியமையாதது. காலத்தின் போக்கிற்கும் மக்களின் தேவைக்குமேற்ப மொழியின் சொற்றொகுதியானது விரிவடையும். அங்ஙனம் விரிவடையுங்கால், அம்மொழியின் வளர்ச்சி தேக்கமின்றி நிகழ்வதாகவும், பயன்பாட்டில் இருப்பதாகவும் உணரப்படும். அல்லாக்கால். அம்மொழி வாழும் நிலையை இழந்துவிடும். இங்ஙனம் கால மாற்றத்திற்கேற்ப உருவாரும் புதிய சிந்தனைகள். கண்டுபிடிப்புகள் முதலானவற்றை வெளிப்படுத்த எண்ணற்ற சொற்கள் தமிழில் புதுவரவாக முகிழ்த்துக் கொண்டிருக்கின்றன. மொழி வளர்ச்சியில் காலத்துக்கேற்பப் புதிய சொற்கள் தோன்றுவதும், பழைய சொற்கள் புதுவடிவம் பெறுவதும் சொல்லின் வடிவம் சிதைவுறுவதும், கூட்டுச் சொற்கள் உருவாவதும் மொழியியல் பண்புகளாகும். அவ்வாறு புதிய சொற்களைத் தோற்றுவிப்பதில் சோம்பற் கொண்டு. வாய்க்குமிடங்களில் எல்லாம் பிறமொழிச் சொற்களைப் புகுத்தி நிறைப்பதும் இருக்குஞ் சொற்களையும் புறக்கணித்து ஒதுக்குவதும் இயல்பான தமிழ்வளர்ச்சியைத் தடுத்தலும் சிதைத்தலுமேயாகும். பிறமொழிக் கலப்பால் இயல்பான தமிழ் கெடும். அத்தகைய கேட்டிலிருந்து தமிழ்மொழியை மீட்டெடுக்க அதன் சொற்களைப் பதிந்து பாதுகாக்கும் முயற்சிதான் அகரமுதலி உருவாக்கம். அப்பணிக்கென உருவாக்கப்பட்டதுதான் செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககம். இந்த இயக்ககத்தின் செயற்பாடுகள் பெரிதும் பாராட்டுதற்குரியன என்பதை மறுத்தற்கில்லை. இந்த இயக்ககத்தின் பணிகளுள் மணிமுடியாய்த் தமிழில் வழங்கும் சொற்கள் அனைத்தையும் தொகுத்து, வரிசைப்படுத்தி. சொற்கருவூலமாக்க வேண்டுமென்பது மாண்புமிகு முதலமைச்சர் புரட்சித் தலைவி அம்மா அவர்களின் கனவாகும்.