பக்கம்:அகராதி ஆய்வுமலர் 2019.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(Upload an image to replace this placeholder.)

- 2 - மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்களின் கனவுகளையெல்லாம் நனவாக்கும் பெருமுயற்சியில் ஈடுபட்டுப் பீடு நடை போட்டு மக்கள் நலத்திட்டங்களைச் சிறப்பான முறையில் செயற்படுத்திக் கொண்டிருக்கும் மாண்புமிகு முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி அவர்கள் மற்றும் மாண்புமிகு துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் அவர்கள் ஆகியோரின் சீரிய வழிகாட்டுதலில் செயற்பட்டுக் கொண்டிருக்கும் மாண்புமிகு அம்மாவின் அரசு "சொற்குவை” என்னும் திட்டத்தை வரையறுத்து வடிவமைத்து அதனைச் செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககம் மூலம் உலக மக்களின் உளமார்ந்த பாராட்டுகளுடன் செய்துகொண்டு வருகிறது. அம்முயற்சியினூடே தமிழில் முதன்முதலில் அகராதியைத் தொகுத்து வழங்கிய வீரமாமுனிவரின் பிறந்தநாளான நவம்பர் எட்டாம் நாளை "அகராதியியல் நாளா ஆண்டுதோறும் கொண்டாட அரசு ஆணையிட்டது. அவ்வரசாணைக்கேற்பத் தொடக்க விழா 08.11.2019-இல் சீரும் சிறப்புமாக நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து அகராதியியல் நாளின் நிறைவு விழாவையும் நடத்துவதற்கான ஏற்பாட்டில் ஈடுபட்டுச் செயற்பட்டுக் கொண்டிருக்கும் செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககத்தை எவ்வளவு பாராட்டினாலும் தகும். நிறைவு நாள் விழாவிற்குப் பெருமை சேர்க்கும் முகத்தான் அறிஞர் பெருமக்களின் அரிய ஆய்வுக்கருத்துகள் செறிந்த கட்டுரைகள் அடங்கிய ஆவணமாகச் சிறப்பு ஆய்வு மலர் வெளியிடுவதறிந்து பெரிதும் மகிழ்கிறேன். இதனைச் செயற்படுத்திக் கொண்டிருக்கும் இயக்குநர் திரு. தங்க. காமராசு அவர்களுக்கும் அவரது பணிக்குத் துணைநின்று உழைத்துக் கொண்டிருக்கும் அலுவலகப் பணியாளர்களுக்கும் எனது மனமார்ந்த பாராட்டுகளையும் விழாச் சிறக்க வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். அன்புடன், ௧. பாண்டியராஜன்