உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அகிம்சா மூர்த்திகள்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

32 வாளர் குடும்பங்களை சுடுகாடாக்கியது. பிள்ளை வியா பாரம் செய்யும் மனித மார்க்கெட்டை திறப்பு விழா செய்தது- சமுதாய நல்லீதங்காள்களை உலவ விட்டது, புளியங்கொட்டை பருத்திக் கொட்டைகளை சாப்பிடச் ! பிணங் சொன்னது-மிருகங்களையல்ல மனிதர்களை! களை சாப்பிடும் அளவுக்கு நடைப் பிணங்களை நடமாடச் செய்தது. பட்டினி போட்டு-பதைக்க உயிர்வாங்கிய இதைப்போன்ற ஆயிரக் கணக்கான கொடுமை சூழ்ந்த பல வேதனைகளைத்தான் விளக்கமாக வெளியிட வெட் கப்பட்டு மந்திரி காட்கில் மறைமுகமாக ஒரே வார்த்தையில் தவறு என்று கூறியிருக்கிறார். அடுத்தபடியாக அமைச்சர் வெளியிடுகிற அழகான மதிப்புரை, திறமையின்மை நிறைந்த ஆட்சி என்பது. சுயதேவைப் பூர்த்தியென்று பேசித் திரிந்து, வெளி நாடுகள் தருவதாகச் சொன்ன தான்யங்களை வாங்க மறுத்து, வீண் வீராப்பும் விவேகமற்ற செயல்களும் புரிந்து மக்களை பிணங்களாக்கியதும், பஞ்சத்திற்குக் காரணம் மழையில்லாததுதான் என்று கண்டு பிடித்து, மழை வருவிக்க, வனமகோற்சவம் என்ற வீண் விழா விலே ஈடுபட்டதும், ஆக்க வேலைகள் பல இருக்க அறிவுக் கருத்துக்களை அடக்கும் வேலையில் அனாவசியமாக ஈடுபட்டதும், சட்டத்தால் மதுவை ஒழிப்பதாகச் சொல்லி மது காய்ச்சுவது குடிசைத் தொழிலாக ஆகி விடுகிற அளவுக்குக் கோணல் ஆட்சி நடத்தியதும், ஓடாத அனுமார் விமானத்திற்கு ஓயர்த செலவு செய்து அலுத்ததும், அழுகிப்போன உணவுப் பொரு ளுக்கு பணத்தைக கொட்டி அழுததும், இதுபோன்ற