உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அகிம்சா மூர்த்திகள்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54 என்று நமது நண்பர் நடராசனையும், அவரது மனைவியையும் காரிலே உட்காரவைத்து, ஊர்வலம் நடத்தி-"நடராசன் வாழ்க! திராவிடநாடு திராவிடருக்கே!" முழக்கமிட்டுச் சென்றால் - போலீஸ் அதிகாரி குறுக்கிட் டால்-‘நடராசனுக்குத் திருமணம் ! அல்லது சஷ்டி யப்தப் பூர்த்தி!' என்று சொன்னால் எப்படி இருக்கும் ! நகைச் சுவைப்போர் ‘நம்பர்' ஒன்று இது! இன்னுமொரு கற்பனை-ஒரு பிரேத ஊர்வலம். கருப்புக் கொடிகள் ஆயிரம். "வட நாட்டு ஏகாதிபத் யம் ஒழிக!" என்ற முழக்கம் ! ஸ்ரீமான் தேசீய அய்யங்கார் மாண்டுவிட்டார் என்ற செய்தி ! எப்படி இருக்கும் இந்த நகைச்சுவை! இப்படி நகைச் சுவைப் போர்கள் நாடெங்கிலும் நடைபெறலாம். - நாட்டுக் குழைக்கும் வீரர்களே! நகைச்சுவைப் போர் மட்டுமல்ல-நாடாள வந்தவர்களின் ஈட்டி முனை களையும் - துப்பாக்கிகளையும் - குதிரையடிகளையும் தாங்கிக் கொள்ளும் இதயத்துடன் அறப்போர் அணி வகுப்பில் வந்துசேர அழைக்கிறேன், தாலமுத்து, நடரா சனின் கல்லறைகளின் சாட்சியாக! - அழகிரிசாமிக்கு தஞ்சையிலே எழுந்துள்ள கற்றூணின் சாட்சியாக! வருக, வருக, வாலிப வீரர்களே ! தொங்கும் நரம்பின் தூள்களை- பொட்டுப் பூச்சிகளை-புன்மைத் தேரை களை 'அழு! இளி! அஞ்சு! குனி! பிதற்று!' என்று எச்சரித்திட எந்நாட்டுத் தோழர்களே! எழுக, வருக! “மாலை மணி" (12–2–'50)