உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அகிம்சா மூர்த்திகள்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூம்புகார் மாநாடு கம்பராமாயணம் மட்டும் கவிதைத் தேனாறு, கம்பன் ஒருவன்தான் கவிச் சக்கரவர்த்தி என்றெல்லாம் பேசப்பட்ட நிலைமை கரைய ஆரம்பித்திருக்கிறது, இப்போது. கம்பனுக்கு மட்டுமே மாலை அணிவித்து மகிழ்ந்தவர்கள், இளங்கோவடிகளுக்கும் மதிப்புத்தர முன்வந்திருக்கிறார்கள். கம்பன் மாநாடுதான் கவிதை மாநாடு என்று கருதிக் கிடந்தவர்கள் சிலப்பதிகார மாநாடு நடத்துகிற அளவுக்கு பெரு நோக்கம் பெற்றி ருக்கிறார்கள். திராவிடத்திலே அரசியலில் மட்டுமின்றி, சமுதா யத்தில் மட்டுமின்றி, இலக்கியத் துறையிலும் புரட்சி செய்தவர்கள் அறிவியக்கத்தாராகிய நாம் என்பதை யாரும் மறுக்க முடியாது. கம்பனுக்கு கோவில் கட்டி அவனைக் கடவுளாக வணங்குகிற அளவுக்கு முதிர்ந்து கம்பராமாயண போன மூட நம்பிக்கையை எதிர்ப்புக் கருத்துகள் முறியடித்தன. கம்பனை நாம் குறை கூறிய நேரத்திலே நம்மீது வீசப்பட்ட கணைகள் கொஞ்சமல்ல. கொடுஞ் சொற்களால் அர்ச்சிக்கப் நமது