உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அகிம்சா மூர்த்திகள்.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- 86 " நட குறித்து யார் பெருமைப் படவேண்டுமோ-“ தம்பி செப்பிய காரியத்தை செவ்வனே செய்து முடித்தான் என்று எண்ணி எந்த உத்தமன் உவகை எய்த வேண்டு மோ - அந்த உத்தமன் - அறிஞன்-நமது அண்ணா இல்லாத திராவிடத்திலே நான் ஒரு வார காலமாக மாடுவது, ஐந்து மாத காலம் நான் சிறையிலே அனுப வித்த வேதனையை விட பல மடங்கு சகிக்க முடியாத வேதனையைத் தருகிறது. ஆனாலும், காராக்கிரகத்திற் குள் சிக்கிக் கிடக்கும் அந்த அண்ணாவை, மற்ற தம்பி மார்களை, நாளைக் காலை காணப்போவதை நினைத்தால் என் உடல் பூரிக்கிறது; உள்ளம் புளகாங்கித மடை கிறது! நான் கடைசியாக உங்களை சென்ற ஜூலை மாதம் 15-ம் தேதி காலை சந்தித்தேன். விடை பெற்றுச் சென் றேன். இன்று திரும்பி வருகிறேன். அன்று நான் உள் ளே சென்றபோது இருந்த அதே ஆட்சிதான் இன்றும் இருக்கிறது.ஆனால் இந்த ஐந்து மாத காலமாக இந்த ஆட்சியார் நடத்திய அலங்கோலங்களை, நாட்டிலே கிளப்பிவிட்ட கொந்தளிப்பை, உண்டாக்கிவிட்ட குமு றலை, திராவிட முன்னேற்றக் கழகத் தொண்டர்களுக்கு இழைத்த சித்ரவதைக் கொடுமைகளை நினைத்தால் இந்த நாடும் ஒரு சிறைச்சாலையாக தோன்றுகிறது என் கண்முன்னே! நான் ஐந்து மாத தண்டனை அனுபவித்த சிறைச்சாலையிலே கஷ்டங்கள் பல உண்டு-கவலை மிக அதிகம்! அதேபோல இந்த சிறைச்சாலையிலும் கஷ் டங்களுக்குப் பஞ்சமில்லை-அது துப்பாக்கிக் குண்டு, தடியடி, கண்ணீர்ப்புகை ரூபத்திலே வந்து கோர நர்த் தனம் ஆடியிருக்கிறது! அந்த சிறைச்சாலைக்கு ஓர்