உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அகிம்சா மூர்த்திகள்.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

87 அதிகாரி - சூப்பரிண்டெண்டு—அவர் கொஞ்சம் நல்ல வர். அதேபோல் இந்த சிறைச்சாலைக்கும் ஓர் ஆதிகாரி -ஆச்சாரியார்! ஆனால், இவரோ மேலே கண்டவரைப் போல நல்லவரல்ல; அவ்வளவுதான் என்னால் சொல்ல முடியும்! ஆகவேதான் நான் சிறிய சிறைச்சாலையிலி ருந்து பெரிய சிறைச்சாலைக்கு வந்திருப்பதாகக் கூறுகி றேன். எனக்கு ஆறு மாதம் தண்டனை விதிக்கப்பட்டது. அதிலே அபராதத் தொகையை கட்டாயமாக வசூலித்த காரணத்தால் ஐந்து மாத தண்டனையோடு வெளியேற் றப்பட்டேன். இதற்கு நான் செய்த குற்றமென்ன? ஐந்து மாத கடுங்காவல் தண்டனை அனுபவிக்கக் கூடிய அளவுக்கு நான் பயங்கரக் குற்றவாளியா? இப்படித் தான் கேட்டார்கள் நான் தண்டனை ஏற்று வழக்கு மன்றத்தைவிட்டு வெளியேறியபோது, சில பத்திரிகை நிருபர்கள். "என்ன ஆறுமாதமா?" என்று அவர்கள் ஆச்சரியத்துடன் கேட்டார்கள். ஆனால் நானோ மௌன மானேன். ஆறுமாதம் மிக அதிகம்தான் என்று தோன் றியிருக்கலாம் அவர்களுக்கு. ஆனால் நான் நினைத்தேன்- தண்டனை இன்னும் அதிகமாகக்கூட இருந்திருக்கும். ஆனால், அரியலுர் சப்-மாஜிஸ்டிரேட்டுக்கு அதற்கு மேல் அதிகாரமில்லை தண்டனை வழங்க. இந்த எண்ணம் தான் என் மன திலே தோன்றியது அப்போது. இந்த தண்டனைக்குத்தான் நாங்கள் செய்த குற்ற மென்ன? தண்டவாளத்தில் படுத்தோமாம்; தற்கொலை செய்துகொள்ள முயற்சித்தோமாம்-இப்படி விளக்கம் தருகிறது குற்றப் பத்திரிகை வழக்கு மன்றத்தில். நாம் டால்மியாபுரத்தில் நடத்திய போராட்டத்தை, தற்