பக்கம்:அகில உலக ஓடுகளப்போட்டி விதிமுறைகள்.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



98

அகில உலக ஓடுகளப்போட்டி விதிமுறைகள்


ஒட்டக்காரர்கள் அசையாமல் இருக்கும் நிலை (Set) என்பது, இரண்டு கைகளையும் தரையில் ஊன்றித் தொடர்பு கொண்டிருப்பதாகும்.

ஒட்டக்காரர்கள் அனைவரும் தங்கள் இடத்தில் இருக்கும் பொழுது' (on your marks) தொடக்கக் கோட்டையோ அல்லது தொடக்கக் கோட்டின் முன்புறத்தில் உள்ள தரையையோ தமது கைகளாலோ அல்லது கால்களாலோ தொடக் கூடாது.

5. 'உங்களிடத்தில் நிலலுங்கள்' என்று சொல்கிறபொழுது, அல்லது அசையாமல் இருங்கள் (set) என்று ஒடவிடுபவர் ஆணையிடுகிற பொழுது, ஒட்டக்காரர்கள் அனைவரும், எக்காரணம் கொண்டும் தாமதப்படுத்தாமல், உடனே அவரவர் இடத்தில், தாங்கள் ஓடத் தயாராகும் நிலைக்கு வந்து விட வேண்டும்.

இவ்வாறு ஆணையிட்ட பிறகு, ஆணைக்குட்படாமல் காரியம் ஆற்றினால், குறிப்பிட்ட ஒரு நேரத்திற்குப் பிறகு, 'தவறான தொடக்கம் (False Start) என்று அறிவிக்கப்படும்.

ஒரு ஆட்டக்காரர் 'உங்களிடத்தில் நில்லுங்கள்' என்று ஆணை கிடைத்த பிறகும் தானும் ஒழுங்காக நிற்காமல், மற்ற ஒட்டக்காரர்களையும் சத்தமிட்டு அல்லது வேறு செயல்கள் மூலமாக தொந்தரவுபடுத்தி நிற்கவிடாமல்

செய்தால், அதுவும் அவரது 'தவறான தொடக்கம்' என்று அறிவிக்கப்படும்.