பக்கம்:அகில உலக ஓடுகளப்போட்டி விதிமுறைகள்.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



112

அகில உலக ஓடுகளப்போட்டி விதிமுறைகள்


15. நெடுந்துார தடையோட்டம்
(Steeple chase)
(விதி - 164)

1. அதிகாரப் பூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட நெடுந்துரத் தடையோட்டங்களின் தூரம் 2000 மீட்டர், 3000 மீட்டர் ஆகும்.

குறிப்பு : 2000 மீட்டர் தூரத் தடையோட்டம் சிறுவர்களுக்கானப் போட்டியாகும்.

2. 3000 மீட்டர் நெடுந்துரத் தடையோட்டத்தில், 28 தடைகளையும், 7 நீள்த் தடைகளையும் தாண்டி ஒட வேண்டும்.

2000 மீட்டர் நெடுந்துரத் தடையோட்டத்தில் 18 தடைகளையும் (Hurdles), 5 நீர்த் தடைகளையும் (Water jumps) தாண்டி ஓட வேண்டும்.

3. மேற்கூறிய இரண்டுப் போட்டி நிகழ்ச்சிகளும், நீர்த் தடையானது, ஒரு சுற்றில் (Lap) நான்காவது தடையாக வைக்கப்பட்டிருக்க வேண்டும். தேவையானால், அந்தப் போட்டியின் முடிவெல்லைக் கோட்டை ஓடுகளப் பாதையின் மற்றொரு பக்கத்தில் இருக்குமாறு குறித்து வைத்துக் கொள்ளலாம்.

2000 மீட்டர் நெடுந்துரத்தடை ஓட்டத்தில் நீர்த் தடைத் தாண்டலானது முதல் சுற்றில் (First Lap) இரண்டாவது தடையாகவும்; மற்ற ஒட்டச் சுற்றுகளில்