பக்கம்:அகில உலக ஓடுகளப்போட்டி விதிமுறைகள்.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



130

அகில உலக ஓடுகளப்போட்டி விதிமுறைகள்


19. காடுமலை ஒட்டங்கள்
(Cross - Country Race)
(விதி 168)

பொதுக்குறிப்பு : உலகம் முழுவதும் பல்வேறு பட்ட பருவங்கள், தட்பவெப்ப நிலைகள், பல்வேறுவிதமான சூழ்நிலைகள், மண் அமைப்புகள் அமைந்திருப்பதால், காடு மலை ஒட்டம் என்பது எவ்வளவு தூரம் அமையவேண்டும். எப்படிப்பட்ட ஒடும் பாதைகளாக இருக்கவேண்டும் என்பன போன்ற விதிமுறைகளை வற்புறுத்திக் கட்டாயப்படுத்திட இயலாத வண்ணம் ஆகிவிடுவதால், அகில உலகப் போட்டிக்கான தூரம் எவ்வளவு என்பதைத் திட்ட வட்டமாகக் கூறமுடியவில்லை.

என்றாலும், கீழே காணும் குறிப்பும் விதிமுறைகளும், காடு மலை ஒட்டப் போட்டியை விரிவு படுத்தவும் வளர்க்கவும் பல நாடுகளுக்கு உதவும் எனபதால், கொடுக்கப்பட்டிருக்கின்றன.

இந்தக் காடு மலை ஒட்டத்தை ஒரு மகிழ்ச்சியான விளையாட் டாகவும் கொள்ளலாம் . ஒடுக ளப் போட்டிகளுக்குத் தங்களைத் தயார் செய்து கொள்வதற்கு உதவும் வகையிலும் பயிற்சிகள் செய்யலாம். ஆண்களுக்காகத் தரப்பட்டிருக்கும் இந்த விதி முறைகள், பெண்களுக்கும் பொருந்தும்.