பக்கம்:அகில உலக ஓடுகளப்போட்டி விதிமுறைகள்.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



134

அகில உலக ஓடுகளப்போட்டி விதிமுறைகள்


குறிப்பு: அகில உலகப் போட்டிகளைத்தவிர, மற்றபடி நடத்தப்படுகின்ற காடுமலை ஒட்டப் போட்டிகளின் ஒட்டப் பாதையானது, அந் தந்த நாட்டின் வட்டார சூழ்நிலைகளுக்கேற்ப, நிலமைக்கேற்ப நிர்ணயித்துக் கொள்ளப்படவேண்டும்.

3. காடுமலை ஒட்டப் போட்டியில் கலந்து கொள்ளும் ஒட்டக்காரர்கள், முதலில் வயது வாரியாகப் பிரிக்கப்பட்ட பிறகே, போட்டிகளை நடத்திடவேண்டும்.

அதற்காக, அகில உலக அமெச்சூர் தலைமைக் கழகம் பின்வருமாறு வயது வரம்பைப் பிரித்துக் காட்டியிருக்கிறது.

1. முதுநிலை ஒட்டக்காரர்கள் (Seniors)

ஒட்ட நாளன்று 16 வயதாகியிருக்க வேண்டும். அதற்கும் மேலும் இருக்கலாம்.

2. இளநிலை ஒட்டக்காரர்கள் (Juniors) 16 வயதுக்குள்ளான அணிகள் - ஓட்டம் நடைபெறுகின்ற ஆண்டின் டிசம்பர் 31ந்தேதி வரை அவர் வயது 20க்குள்ளாக இருக்க வேண்டும்.

3. பெண்கள்: (Women) 18 வயதும் அதற்கு மேற்பட்ட நாளும், அதாவது போட்டி நடைபெறுகின்ற நாளன்று.