பக்கம்:அகில உலக ஓடுகளப்போட்டி விதிமுறைகள்.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா

135


4. இளம் பெண்கள் (Junior Women) 15 வயதுக்குட்பட்ட பெண்கள். அதாவது ஒட்டம் நடைபெறுகின்ற ஆண்டின் டிசம்பர் 31ந் தேதியன்று 14 வயதுக்குக்கீழானவர்கள் கலந்து கொள்ள அனுமதிக்கப் படமாட்டார்கள்.

5. ஒடுகின்ற தூரங்கள்: (Distances)

அ) ஆண்களுக்கான ஓடும் தூரம் 7 கிலோ மீட்டருக்குக் குறையாமலும் 14 கிலோ மீட்டருக்கு மிகாமலும் இருக்க வேண்டும். இளைஞர்களுக்கான ஒடும் தூரம் 5 கிலோ மீட்டருக்குக் குறையாமலும் 10 கிலோ மீட்டருக்கு மிகாமலும், பெண்களுக்கான ஒடும் தூரம் 2 கிலோ மீட்டருக்குக் குறையாமலும், 5 கிலோ மீட்டருக்கு மிகாமலும் இருக்க வேண்டும்.

ஆ) அகில உலகப் போட்டிகளில் உள்ள தூரம்: 1. ஆண்களுக்கு - 12 கிலோ மீட்டர் 2. இளைஞர்களுக்கு - 8 கிலோ மீட்டர்(ஏறத்தாழ) 3. பெண்களுக்கு - 4 கிலோ மீட்டர்(ஏறத்தாழ)

குறிப்பு : போட்டிகளை நடத்துகின்ற நிறுவனங்கள் மாதாமாதம் போட்டிகளை நடத்துகிறபோது, ஓடுகின்ற தூரத்தைக் கொஞ்சங்கொஞ்சமாக அதிகப்படுத்திக்கொண்டே செல்லவேண்டும் என்று தலைமைக் கழகம் பரிந்துரை செய்கிறது.