பக்கம்:அகில உலக ஓடுகளப்போட்டி விதிமுறைகள்.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

164

அகில உலக ஓடுகளப்போட்டி விதிமுறைகள்



56. தவறுகள் (Failures): 4. ஒரு போட்டியாளர் கீழ்க்காணும் தவறுகளில் ஏதாவது ஒன்றைச் செய்தாலும், அவர் தாண்டாது தவறிழைத்தார் என்று அறிவிக்கப்படுவார். அ) தாண்டுவதற்காக ஓடி வருகிற பொழுது, அல்லது தாண்ட முயற்சிக்கிற பொழுது, உதைத்தெழும்பும் பலகையில் பின்புறம் உள்ள (மணற்பரப்புக்கு அருகாமையில் உள்ள இடம்) தரைப் பகுதியை தனது உடம்பின் ஏதாவது ஒரு பகுதியில் தொட்டுவிட்டாலும்; இவ்வாறு பின்புறத்தரையைத் தொட்டுவிடுகிறாரா என்பதை எளிதாகக் கண்டுபிடித்துக்கொள்ள, உதைத்தெழும்பும் பலகையினை ஒட்டி, பிளாஸ்டிசின் எனும் பலகை ஒன்றைப் புதைத்து வைத்தால், சிறப்பாகத் தவறினை அறிய உதவும். (இது பற்றிய விளக்கத்தை 14-ஆம் பகுதியில் காண்க.) ஆ) உதைத்தெழும்பும் பலகைக்கு இருபுறம் உள்ள பகுதிக்கு (Outside) அப்பால் இருந்து தாண்டுதல் அல்லது உதைத்தெழும்பும் பலகைக்கு சரியாகக் கோடிட்டுப் பார்த்தாலும், அதற்குப்பின்புறம் உள்ள தரையில் கால் பதித்திருந்தால்; இ) தாண்டி விழுகிற மணற்பரப்பில் காலூன்றுவதற்கு முன்னர், உதைத்தெழும்பும் பலகைக்கும் தாண்டி விழும் மணற்பரப்புக்கும் இடையிலுள்ள தரைப்பகுதியில் கால்பட்டாலும்;