பக்கம்:அகில உலக ஓடுகளப்போட்டி விதிமுறைகள்.pdf/185

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

182

அகில உலக ஓடுகளப்போட்டி விதிமுறைகள்


0.6 மீட்டருக்குக் குறையாத நீளம் தரைக்கு மேலே உள்ளதாக ஊன்றப் பட்டிருக்க வேண்டும். அதன் விட்டமானது 8 மி.மீ இருக்க வேண்டும்.

குறிப்பு: 2: எறிபரப்பாதை 40 டிகிரி கோணத்தில் குறிக்கப் பட்டிருப்பதுடன், எறி வட்டத்தின் மையப்புள்ளியிலிருந்து இரண்டு புறமுமு் 20 மீட்டள் தூரம் வரை, அளந்து, அந்தப் பக்கக் கோடு இரண்டையும் இணைத்துக் குறிக்கப்பட்டிருக்க வேண்டும்.

9. எறிபரப்பின் ஏற்ற இறக்க சரிவானது, எறிவட்டத்திலிருந்து எறிபரப்பு வரையிலும் 1:1000க்கும் மேற்படாத சரிவாக அமைந்திருக்கலாம்.

10. ஒவ்வொரு முறை போட்டியாளர் சரியாக எறிந்து விடுவதை கட்டாயம் அளந்தாக வேண்டும். அப்படி அளக்கின்ற முறையானது - இரும்புக் குண்டு விழுந்து, முதன் முதலாக தரையில் பதித்திருக்கின்ற பின்புற விளிம்பிலிருந்து, தடுப்புக் கட்டையின் வட்டத்தின் உட்புற விளிம்பு வரையில் தான் அளந்து கொள்ள வேண்டும். ஆனால், இரும்புக் குண்டு விழுந்த இடத்திலிருந்து, எறி வட்டத்தின் நடு மையப் புள்ளிவரை அளவு நாடாவைப் பிடித்து, விழுந்த இடத்திற்கும் தடுப்புக்கட்டையின் உட்புற விளிம்புக்கும் இடைப்பட்ட தூரம் என்பதாக கணக்கிட வேண்டும்.