பக்கம்:அகில உலக ஓடுகளப்போட்டி விதிமுறைகள்.pdf/186

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா

183



உலக சாதனை அல்லது தேசிய சாதனையின் அளவு

11. தெளிவாகத் தெரியும் படி ஊன்றியோ, அல்லது ஒரு தட்டினைப் பதித்தோ, சாதனை அளவை காட்சிக்காக வைத்திருக்க வேண்டும்.

12. அகில உலகத் தலைமைக் கழகத்தின் விதிகளின்படி நடத்தப்படுகின்ற போட்டிகளில், போட்டியாளர்கள் கொடுக்கின்ற எறி சாதனமான இரும்புக் குண்டைத்தான். எறிய பயன்படுத்திட வேண்டும். போட்டியின்போது அதில் எந்தவிதமான மாற்றத்தையும் செய்யக்கூடாது.

ஒடுகளப் பரப்பிற்குள்ளே எந்தவிதமான சாதனங்களையும், எந்த போட்டியாளரும் எடுத்துச் செல்ல அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

இரண்டு மூன்று நாடுகளுக்கிடையே நடைபெறுகின்ற போட்டியின் போது, போட்டியாளர்கள் தங்களுடைய சொந்த சாதனங்களை எடுத்துச் சென்று பயன்படுத்திக் கொள்ளலாம். ஆனால் அவைகளைப் போட்டி நேரத்திற்கு முன்னதாக பொறுப்புள்ள அமைப்பாளர்கள் சோதனை செய்து, சரி பார்த்து, அங்கீகரித்திருக்க வேண்டும். அப்படிப் பட்ட சாதனங்களை, மற்ற போட்டியாளர்கள் விரும்பினால், பயன்படுத்திக் கொள்கின்ற உரிமையும் அனுமதியும் உண்டு.

13.(அ) இரண்டு அல்லது மூன்று விரல்களை ஒன்றாக இணைத்துத் துணியால் அல்லது பசையுள்ள டேப்பினால் சுற்றிக் கட்டியிருப்பது போன்ற காரியத்தை, ஒரு எறியாளர் செய்து கொண்டு வந்திருக்கிறார் என்றால்