பக்கம்:அகில உலக ஓடுகளப்போட்டி விதிமுறைகள்.pdf/216

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பக்கம்:அகில உலக ஓடுகளப்போட்டி விதிமுறைகள்.pdf/216 தொகுக்கப்படுகிறது

213 அகில உலக ஓடுகளப்போட்டி விதிமுறைகள்


அளவுகள் :

     எறிவட்டத்தினுடைய விட்டத்தின் உட்புற அளவானது 2.135 மீட்டராகும். அதன் கனம் 5 மில்லி மீட்டராகும். (வட்டத்தின் சுற்றுக் கோடாக இருக்கும் இரும்புக்கரையின் கனம் 6 மில்லி மீட்டராகவும், அதன் உச்சிப்பகுதி வெள்ளைப் பூச்சுடனும் இருக்க வேண்டும்.) 
     எறிவட்டத்தின் சரிபாதியாக உள்ள நடுப் பகுதியில் இருபுறமும் உள்ள உலோகக் கரையிலிருந்து (Rim) வெளிப்புறமாக 0.75 மீட்டர் தூரம் இருபக்கத்திலும் நீட்டி விடுகிறபோது, அந்த வெள்ளைக் கோடு 50 மில்லி மீட்டர் அகலத்துடன் போடப்படவேண்டும். அந்தக் கோட்டினை வெள்ளை வண்ணப்பூச்சுள்ளதாக வைக்கலாம். அதை மரத்தால் அல்லது அதற்குப் பொருத்தமான வேறு பொருளால் செய்து வைக்கலாம். வட்டத்தின் நடுக்கோட்டுக்கு நேராக இருபுறமும் பக்கவாட்டில் நீட்டப்பட்டக் கோடுகளானது நேர்க்கோண அளவுடன் அமைக்கப்படவேண்டும்.
      சங்கிலிக்குண்டினை தட்டெறியும் எறிவட்டத்திற்குள்ளேயிருந்தும் எறியலாம். அனால் அந்த எறிவட்டமானது 2.50 மீட்டர் விட்டத்திலிருந்து 2.135 மீட்டர் விட்டத்திற்கு மாற்றி அமைக்கப்பட்டு, அதன் சுற்றுவட்ட இரும்புக் கரைகளையும் போட்டியாளர்களுக்கு அபாயம் நேராத அளவுக்கு மாற்றி வைக்க வேண்டும்.
எறிபரப்பு(The Throwing Field)

16. எறிவட்டத்திலிருந்து எறியப்படுகின்ற தரைப்பகுதியை நோக்கி ஏற்படுகின்ற சரிவு இறக்க மானது