பக்கம்:அகில உலக ஓடுகளப்போட்டி விதிமுறைகள்.pdf/215

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா 212 பக்கக் கோட்டின் மீதோ அல்லது பக்கக் கோட்டிற்கு வெளியிலோ ஊன்ற வேண்டும். குறிப்பிட்ட இந்தப் போட்டியில் நிறுவப்பட்டிருக்கும் உலக சாதனை தூரத்தையும் அளந்து அந்த இடத்தில் தெளிவான வண்ணம் உள்ள ஒரு கொடியினை ஊன்றி, மற்ற எல்லோருக்கும் தெரியும் படியாக ஊன்றி வைக்க வேண்டும். அல்லது அந்த நாட்டில் ஏற்படுத்தப்பட்டிருக்கும் தேசிய சாதனையின் தூரத்தில் ஒரு கொடியை ஊன்றிக் காண்பிக்க வேண்டும். சங்கிலிக்குண்டு எறிவட்டத்தின் அமைப்பு : 15. சங்கிலிக்குண்டு எறிவட்டத்தின் சுற்றுக்கோடு இரும்புக்கம்பி (Band Iron), எ.குக் கம்பி அல்லது அதற்குப் பொருத்தமான பொருளால், அதன் உச்சி பாகம் தெளிவாகத் தெரிவது போலவும், அதன் வெளிப்புறம் தரைப்பகுதியாக இருப்பது போலவும் அமைந்திருக்க வேண்டும். எறிவட்டத்தின் உட்புறத்தரையானது கான்கிரீட், அஸ்பால்ட், அல்லது அதற்கிணையான உறுதிமிக்கப் பொருளால் ஆக்கப்படவேண்டும். ஆனால், அது வழுக்கும் தரைப்பகுதியாக அமைந்திருக்கக் கூடாது, - எறிவட்டத்தின் உட்புறமானது சமமான தரையாக இருப்பதுடன், வட்டத்தின் முற்பகுதித் தரையைவிட, பின்புறத் தரைப்பகுதி 20 மில்லி மீட்டர் (6 மில்லி மீட்டர்) அளவு குறைந்த உயரம் உள்ளதாக இருக்கலாம்.