பக்கம்:அகில உலக ஓடுகளப்போட்டி விதிமுறைகள்.pdf/232

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

229 அகில உலக ஓடுகளப்போட்டி விதிமுறைகள் தோடானது வெள்ளை வண்ணப் பூச்சால், அல்லது மரக் கட் டையால அல்லது உலோகத் தினால அமைக்கப்படலாம். அதன் அகலப்பகுதி 70 மில்லி மீட்டர் அளவு தான் இருக்க வேண்டும். வளைவின் இரு முனைகளையும் நோக்கோணத்தில் இணைக்கின்ற கோடுகள் தான் இணைக் கோடுகள் (Parallel Lines) ஆகும். வளைவின் இரு முனையிலிருந்தும் 150 மீ நீளம் வரை 70 மில்லி மீட்டர் அகலமுள்ள ஒரு கோட்டினால், நீட்டி விட வேண்டும். ஓடி வரும் பாதையின் சரிவிறக்கமானது, அதிக பட்சம் 1:100 என்பதாகவும், ஓடி வரும் திசை நோக்கியுள்ள பாதையின் சரிவிறக்கம் 1 : 100க்கு மேற்படாமலும் அமைந்திட வேண்டும். எறியும் பரப்பை நோக்கி ஓடி வரும் பாதையும் அதன் எறிகள் நீண்டு செல்லும் தரைப்பகுதியும் 1 : 1000 என்ற அளவுக்கு மேற் படாமல் சரிவிறக்கமாக அமைந்திருக்கலாம். குறிப்பு : ஓடி வரும் பாதையின் நீளம் 33.5 மீட்டருக்கு மேல போகக் கூடாது என்பதாகப் பரிந்துரை செய்யப்பட்டிருக்கிறது. 9. ஓடி வரும் பாதையில் எந்த விதமான அடையாளக் குறியும் வைத்துக் கொள்ளக் கூடாது. ஆனால், போட்டியை நடத்திடும் பொறுப்பாளர்கள் தருகின்ற பொருட்களை வைத்து, ஓடிவரும் பாதையின் பக்கக் கோடுகளின் மீது வைத்துக் கொள்ள அனுமதிக்கலாம்.