பக்கம்:அகில உலக ஓடுகளப்போட்டி விதிமுறைகள்.pdf/231

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா 228 நின்ற நிலைக்கு வந்து, பின்னர் ஓடி வந்த திசைப்பக்கமாக வந்து, எறிவளைவு (Arc) அல்லது அதனைச் சார்ந்த கோடுகளின் பின்புறமாக வந்து வெளியேறிட வேண்டும். (எ) குறிப்பிட்டுள்ள எறி விதிமுறைகளுக்கேற்ப எறிகிறபோது, காற்று வெளியில் (Air) வேலானது முறிந்து விட்டால் அந்த எறியானது, ஒரு வாய்ப்பு முடிந்ததென்று அறிவிக்கப்படாமல், மீண்டும் ஒரு எறியை எறிய அனுமதிக்கப்படும். 6. விதிமுறைகளுக்குப் புறம்பாக எறியும் எறி, அல்லது தவறான இடத்தில் வேலினைப் பிடித்து, அல்லது தவறான முறைகளில் எறிகிற எறி, கணக் கில் குறிக்கப்படமாட்டாது. ஆனால், ஒரு வாய்ப்பு முடிந்ததென்று அறிவிக்கப்படும். 7. எறியப்பட்ட வேலினை, மீண்டும் எறியிடத்திற்குத் துக்கிக்கொண்டு வந்தே தரப்படவேண்டும். விழுந்த இடத்திலிருந்தே எறிந்து அனுப்பக்கூடாது. ஓடிவரும் பாதையும் எறிகளமும் 8. ஓடி வரும் பாதையின் நீளம் 36.5 மீட்டருக்கு மேல் அல்லது 30 மீட்டருக்குக் குறைவாக இருக்கக்கூடாது. அந்தப் பாதையின் அகலம் 4 மீட்டள் தூரம் இருக்க, அதன் எல்லைக் கோடுகள் 50 மில்லி மீட்டர் அகலத்தில் குறிக்கப்படவேண்டும். (படம் காண்க) 9. மீட்டர் தூரத்தின் மையப்புள்ளியிலிருந்து குறிக்கப்பட்ட வளைவுக்கோடு (AIC) தான் எறியும் எல்லைக் கோடாகக் குறிக்கப்பட்டுள்ளது. அந்த எறி வளைவுக்