பக்கம்:அகில உலக ஓடுகளப்போட்டி விதிமுறைகள்.pdf/245

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா 242. 29. ஆஉட்டுப்போட்டி நிகழ்ச்சிகள் (Combined Competitions) (விதி - 195) ஆண்கள் (பென்டாதலான், டெக்காதலான்) 1. பென்டாதலான் என்பது 5 போட்டி நிகழ்ச்சிகள் கொண்டது. கீழ்க்காணும் வரிசை முறைப்படி தான் போட்டிகள் நடந்தாக வேண்டும். 1. நீளத்தாண்டல், 2. வேலெறிதல் 3. 200 மீட்டள் ஒட்டம் 4. தட்டெறிதல், 5. 1500 மீட்டள் ஓட்டம். 2. டெக்காதலான் என்பது 10 போட்டி நிகழ்ச்சிகள் கொண்டது. இரண்டு நாட்களில் நடத்தி முடிக்கப்படுவதாகும். கீழ்க் காணும் வரிசை முறைப்படிதான் போட்டிகள் நடந்தாக வேண்டும். முதல் நாள் : 1. 100 மீட்டர் ஓட்டம் 2. நீளத்தாண்டல் 3. இரும்புக்குண்டு எறிதல் 4. உயரத்தாண்டல் 5. 400 மீட்டர் ஓட்டம்.