பக்கம்:அகில உலக ஓடுகளப்போட்டி விதிமுறைகள்.pdf/244

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

241 அகில உலக ஒடுகளப்போட்டி விதிமுறைகள் பெரும் போட்டிகள் நடைபெறும் பொழுது, போட்டியாளர்கள் செல்கிற சாலைகள் யாவும் போட்டி நேரத்தின் போது வாகனங்கள் நடமாட்டத்தைத் தடுத்திடுமாறு, மூடப்பட்டிருக்க வேண்டும். இருபுறமும் போய் வரும் வாகனங்களை நிறுத்துவதுடன், மோட்டார் சைக்கிள், கார்கள் போன்ற வாகனங்கள் நடமாட்டத்தை முற்றிலும் தடுத்து நிறுத்தி, சாலைகளில் பாதுகாப்பு சூழ்நிலையைத் தோற்றுவித்திட வேண்டும். குறிப்பு: நடைப்போட்டியைக் கண்காணிக்கும் நடுவர்கள் மேலும் தெளிவாகத் தெரிந்து கொள்ள, அகில உலக அமெச்சூள் கழகத்தின் நடைப் போட்டிக் குழுவானது, ஒரு கையேடு ஒன்றை வெளியிட்டுள்ளது. விரும்புவோர், அந்தக் கழகத்திடம் எழுதிக் கேட்டு வாங்கிப் பயன்பெறலாம்.