பக்கம்:அகில உலக ஓடுகளப்போட்டி விதிமுறைகள்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா

47


என்பதை தலைமை நடுவர் திருப்திகரமாகக் கருதினால், அந்தக் குறிப் பிட்டப் போட்டியாளரை, இந்தப் போட்டியிலிருந்தே விலக்கிவிட அவருக்குப் பூரண அதிகாரமுண்டு. அவர் வேண்டுமென்றே ஒடும் பாதை மாறி ஒட வில்லை, தவறுதலாக நிகழ்ந்துவிட்டது என்றாலும், வெற்றி பெற வாய்ப்பு போன்ற பலன் கிடைக்கலாம் என்று அவள் கருதினால், அவர் விருப்பம் போல முடிவெடுக்கலாம். அதாவது அவரைப் போட்டியில் இருந்து நீக்கிவிடலாம்.

போட்டியிடும் பகுதியிலிருந்து வெளியேறினால்

9. ஒட்டப் போட்டியின் போது, ஒடும் பாதையிலிருந்து வேண்டுமென்றே விலகிப் போய் வருபவரை, அந்த ஒட்டப் போட்டியைத் தொடர்ந்து ஓடவிடாமல் தடை செய்து வெளியேற்றிவிடலாம்.

சாலை ஓட்டங்களில், அல்லது 20 கி.மீட்டர் தூரத்து அல்லது அதற்கும் மேற்பட்ட நடைப் போட்டிகளில், சாலையிலிருந்து சற்று ஒதுங்க, அல்லது ஓடும் பாதையிலிருந்து சற்று விலகி நிற்க, முன் அனுமதி பெற்றுக்கொண்டு, நடுவர் ஒருவரின் கட்டுப்பாட்டின் கீழ் அதுபோல் விலகியிருக்கலாம். அப்படிச் செய்வதானது, அவர் ஓடுகிற தூரத்தை அல்லது நடக்கிற தூரத்தைக் இறைத்து விடுவது போல் அந்த அனுமதி அமைந்து விடக்கூடாது.

தாண்டும் அல்லது எறியும் போட்டிகள் நிகழ்ச்சிகள், டெக்காதலான், ஹெப்டாதலான் போன்ற நிகழ்ச்சிகளில்