பக்கம்:அகில உலக ஓடுகளப்போட்டி விதிமுறைகள்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



46

அகில உலக ஓடுகளப்போட்டி விதிமுறைகள்


மீதியுள்ள மற்ற போட்டியாளர்களைக் கொண்டு, திரும்பவும் அதே ஒட்டப் போட்டியை ஓடச் செய்யலாம், அல்லது.

வெளியேற்றப் பட்டவரைத் தவிர, மற்றவரை திரும்பவும் ஓடவிடாமல் (அது முதல் கட்டத் தேர்வுப் போட்டியாக இருந்தால்) அடுத்தப் போட்டியில் ஓடச் செய்யுமாறு அனுமதிக்கலாம்.

இவ்வாறு ஏதாவது ஒரு முடிவினை எடுத்து, நிலையை சரி செய்ய தலைமை நடுவருக்கு அதிகாரமுண்டு. தாண்டும் அல்லது எறியும் போட்டியில் ஒரு வாய்ப்பின் (Trail) போது, மேற்கூறியவாறு இடையூறு நேர்ந்தால், வீணாகி போன அந்த வாயப்புக்குப் பதிலாக, மீண்டும் ஒரு வாய்ப்பினை வழங்க, தலைமை நடுவருக்கு அதிகாரம் உண்டு.

ஓடும் பாதைக்குள்ளே ஓடுதல்
(Running on Lanes)

7. எல்லா ஒட்டப் போட்டிகளிலும், ஒவ்வொரு போட்டியாளரும் தமக்கென ஒதுக்கப்பட்டிருக்கும் ஓடும் பாதை (Lane) யின் உள்ளே தான் ஓட்டத் தொடக்கத்திலிருந்து ஓட்ட முடிவு வரை ஓட வேண்டும். இந்த ஓட்டமுறை எல்லா தூர ஓடும்பாதை ஒட்டப் போட்டிகளுக்கும் பொருந்தும்.

8. நடுவரோ அல்லது துணை நடுவரோ கூறுகிறவாறு, ஒரு போட்டியாளர் ஓடும் பாதைக்கு வெளியே ஓடினார்