பக்கம்:அங்கும் இங்கும்.pdf/34

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
30
 

ஒட்டு மொத்தத்தில், போட்ட முதல் வந்தால் போதும் என்ற அடிப்படையில் சிறப்பாகப் பணிபுரிகின்றன, இவ்வெளியிட்டுக் கழகங்கள்.

"மேலும், நூல்களை ஐந்நூறு ஆயிரம் படிகள் என்ற குறைந்த எண்ணிக்கையில் அச்சிடுவதில்லை. பொதுமக்களும் 'ஆளுக்கொரு நூல் நிலையம்' என்ற கருத்தோடு சொந்தமாக நூல்களை வாங்கச் சுணங்காது சுடச்சுட வாங்குவதால் நூல்களை முதல் பதிப்பிலேயே பதினாயிரக்கணக்கில் அச்சிடுகிறார்கள். பதிப்பிற்குப் பதிப்பு ஏராளமான படிகள். விரைவான விற்பனை, 'காற்றுள்ள போதே தூற்றிக் கொள்ளும்’ சுரண்டல் கண்ணோட்டம் அற்ற நிலை. இவையே விலைக் குறைவிற்கு உள்ள முக்கிய காரணம். நாங்கள் பெற்ற பதிலின் சாரம் இது.

பதினாயிரக்கணக்கில் வாங்கிப் படிக்கப்படும் நூல்கள் எவை ? அக ஆயிரமா? புற ஆயிரமா? காதற் கதைகளா? போராட்ட நவீனங்களா ? பொழுது போக்குக் கதம்பங்களா ? விகடச் செண்டுகளா ?

இத்தகைய ஐயங்கள் எழுந்தன எங்களுக்கு. அவற்றை வெளியிட்டோம்.

"இரஷிய நூல் வெளியிட்டுக் கழகத்திற்குச் செல்லும் போது நினைவு படுத்துங்கள். அங்குள்ளவர்களிடம் இதைப் பற்றி வினவுவோம்" என்றார் மொழி பெயர்ப்பாளர்.

நாள்கள் சில சென்றன. இரஷிய நூல் வெளியீட்டுக் கழகத்திற்குச் சென்றோம். அதன் நடைமுறையைப் பற்றிப் பலப்பல தெரிந்து கொண்டோம். எங்கள் முந்தைய ஐயங்களை, மொழி பெயர்ப்பாளரே வெளியிட்டார்.

"பொழுது போக்கு நூல்களும், நகைச்சுவை நறுக்குகளும் படிக்காதவர்கள் அல்லர் சோவியத் மக்கள், போராட்டக்