பக்கம்:அங்கும் இங்கும்.pdf/66

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
62
 

நடந்துகொண்டு வந்தார், அவ்விளைஞர்-அல்ல. முப்பத்தைந்து நாற்பது வயதுடைய-அவர்.

“போரிலே ஈடுபட்டு ஊனப்பட்ட யாரும் சுமையாக உட்கார்ந்ததில்லை. பரிகாரம் தேடிக்கொண்டு, ஏதாவது ஒரு வேலைக்குப் பயிற்சி பெற்றுத் தாமே உழைப்பதைக்காணலாம். அத்தனை பேருடைய உழைப்பும் நாட்டின் வளத்திற்குத் தேவை. பலரும், சென்ற காலத் தியாகத்தைக் காட்டி, வாழ்நாள் முழுவதும் வாழ்ந்தால், நாட்டில் வளர்ச்சியும் வளமும் எப்படி ஏற்படும் ?” இது, அவரது படப்பிடிப்பு

எங்களிலே ஒருவருக்குக் காய்ச்சல் வருவதுபோல் இருந்தது. அதைச் சாக்காகக் காட்டி, நாங்களும் குழாய் நீராடி, உண்டுவிட்டு, ‘ஆர்டெக்’ மாணவர் நலவிடுதிக்குச் சென்றோம்.

ஆர்டெக் மாணவர் இல்லத்தைக் காணும் பொருட்டே நாங்கள் இவ்வளவு நெடுந்தூரம் வந்தோம். நாங்கள் சென்ற போது உயர்நிலைப் பள்ளி மாணவ மாணவிகள் பலர், நீராடிவிட்டு தங்கள் அறைகளுக்குத் திரும்பிக் கொண்டிருந்தனர் எங்களைக் கண்டதும் வணக்கம் கூறிவிட்டுச் சென்றனர்.

இல்லப் பொறுப்பாளர், எங்களை அழைத்துக் கொண்டு போய் பல இடங்களையும் காட்டினார்; இந்த இல்லம் கருங்கடல் கரையோரத்தில் கட்டப்பட்டிருக்கிறது. அறுநூறு பேர் ஏககாலத்தில் தங்கக்கூடிய அளவில் விடுதி ஒவ்வொன்றும் இருந்தது. இப்படி மூன்று விடுதிகள்.தனித்தனியே அவை வளைவுக்குள் இருந்தன. நான்காவது விடுதியொன்றை கட்டிக் கொண்டிருந்தனர். அது முடிந்தால் 2400 பேர் ஒரே நேரத்தில் தங்கலாம்.

இவை, உயர்நிலைப்பள்ளி மாணவ, மாணவியருக்காக தனித் தனியே ஒதுக்கப்பட்டவை. இருபாலரும் அங்கு