பக்கம்:அசோகனுடைய சாஸனங்கள்.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

94

சாஸனங்கள்

2.பியதஸி ஜீவராசிகளுக்குச் செய்யும் பணிவிடை

தேவர்களுக்குப் பிரியனான பியதஸி அரசனால் ஆளப்பட்ட ராஜ்யத்தின் எல்லாப் பாகங்களிலும், அதுமட்டுமல்ல, சோழர், பாண்டியர், ஸத்யபுத்திரர், கேரளபுத்திரர் போன்ற அயல் அரசர் நாட்டிலும், மிக அப்பாலுள்ள தாம்பபம்னிI யவன ராஜன் அன்டியோக்கன்,2 மேல்சொல்லிய அன்டியோக்கனுக்கு அண்டை அரசர்கள்3 நாடுகளிலும் எல்லா இடத்தும் தேவர்களுக்குப் பிரியனான பியதஸி அரசன் சிகித்ஸைக்காக இருவித ஏற்பாடுகள் செய்திருக்கிறான் ; அவையாவன, மனிதருக்கு வைத்தியசாலை மிருகங்களுக்கு வைத்தியசாலை. மேலும் மனிதருக்கு உபயோகமானதும் மிருகங்களுக்கு உபயோகமானதுமான மருந்து மூலிகைகள் எவையோ அவை கிடைக்கு மிடங்களிலிருந்து எங்கெங்கு கிடைக்கவில்லையோ அவ்விடங்களுக்குக் கொண்டுவரப்பட்டு பயிர் செய்யப்படுகின்றன. கனி காய் கிழங்கு வகைகளும் வரவழைக்கப்பட்டுப் பயிராகின்றன. மனிதருக்கும் மற்றப் பிராணிகளுக்கும் சௌக்கியத்தைக் கொடுப்பதற்காகப் பாதையோ ங்களில் கிணறுகள் வெட்டவும் நிழல் கொடுக்கும் மரங்கள் வளர்க்கவும் செய்யப்படுகின்றன.

மொத்தம் 4 வாக்கியங்கள்.

1. இங்கு தாம்பபம்னி என்பது, திருநெல்வேலி ஜில்லாவிலுள்ள தாம்பிரபர்ணி நதியைக் குறிக்கவில்லையென்று தோன்று