உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அசோகனுடைய சாஸனங்கள்.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இரண்டாம் சாஸணம்

95

கிறது. இது சிலோன் தீவின் வடபாகத்தின் பெயராயுமிருந்தது. மகாவம்சம். அத். 6. இத் தீவே சாஸனத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது போலும். ஸ்ட்ராபோ முதலிய கிரேக்க ரோம யாத்திரிகர்கள் சிலோன் தீவுக்கு தாப்ரபோனெ என்று பெயர் கொடுத்திருக்கின்றனர். அதனால் அசோகன் தாம்பபம்னி என்ற பெயரால் சிலோன் தீவையேகுறிப்பிடுகின்றான் போலும்.

2. அண்டியோக்கன் II (கி. பி. 261-246.) சந்திரகுப்த மௌரியனோடு போர்செய்து பின் சமாதானத்துக்கு வந்த ஸெல்யூக்கஸ்ஸினுடைய பேரன்.

3. அண்டியோக்கஸுக்கு நான்கு அண்டை அரசர்களைப் பற்றி 13-ம் சாஸனத்தில் காண்க.