பக்கம்:அசோகனுடைய சாஸனங்கள்.pdf/119

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஒன்பதாம் சாஸனம்

107

9. உண்மைச் சடங்கு.

தேவர்களுக்குப் பிரியனான பியதஸி ராஜன் இப்படிச் சொல்லுகிறான். மனிதர், மங்களம்I உண்டாகும் பொருட்டுச் சடங்குகள் செய்கிறார்கள். கஷ்டகாலங்களிலும் புத்திரரின் கலியாண காலங்களிலும் புத்திரிகளின் விவாககாலங்களிலும் மக்கட்பேறுற்ற காலங்களிலும் பிரயாணம் ஆரம்பம் செய்யும்போதும் இதுபோன்ற வேறு காலங்களிலும் ஜனங்கள் சடங்குகளைச் செய்கின்றனர். இவ் வேளைகளில், மகளிர், பலவும் பலவிதமுமானவும் இழிவும் உபயோகமில்லாததுமான சடங்குகளைச் செய்கிறார்கள். மங்கள கருமங்கள் (சடங்குகள்) அனுசரிக்கத் தக்கனவே. ஆனாலும், இப்படிப்பட்ட சடங்குகளினாற் சிறிதும் பயனில்லை. இதற்கு எதிராகத் தர்மம் என்ற சடங்கோ அத்யந்த லாபத்தை தருவதாக இருக்கிறது. அஃது என்னவெனில், அடிமைகளையும் சேவகர்களையும் அன்புடன் நடத்தல், குருமார்களைப் போற்றல், பிராணிகளிடத்தில் கருணைகாட்டல், பிராமணர் சமணர்களுக்குத் தானஞ்செய்தல் ; இவை யாவும் மேன்மையாம். இவையே தர்மகருமங்கள் எனப்பெயர் பெறும். (எல்லாரும் தந்தம்) தந்தைக்கும் மகனுக்கும் சகோதரனுக்கும் நண்பனுக்கும் எஜமானனுக்கும் தோழனுக்கும் அயலானுக்கும் 'இதுவே புனிதமானது, இதுவே நன்மையை நிலை நாட்டுவது, இவ்வித மங்களமே செய்யத்-