பக்கம்:அசோகனுடைய சாஸனங்கள்.pdf/141

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஸ்தம்ப சாஸனங்கள்

129

3. பிரயாகை ஸ்தம்பம். இதுவும் அதன் பூர்வ ஸ்தானத்திலிருந்து பெயர்க்கப்பட்டிருக்கிறது, முன் இது கௌசாம்பியில் நின்றிருக்க வேண்டுமென்று இதிலுள்ள லிகிதம் ஒன்று தெரிவிக்கிறது. ஸ்தம்ப சாஸனங்களன்றி வேறு இரண்டு லிகிதங்களும் இந்த ஸ்தம்பத்தில் இருக்கின்றன.

4. லௌரியா அரராஜ் ஸ்தம்பம். இதிலுள்ள லிகிதங்கள் மிகச் சுத்தமாகவும் அழகாகவுமிருக்கின்றன. லௌரியா, என்றால் சிவலிங்கமென்று கருத்து.

5. லௌரியா நந்தன்கர் ஸ்தம்பம். இந்த ஸ்தம்பத்தின் படம் 66-ம் பக்கத்தில் சேர்க்கப்பட்டிருக்கிறது. லிகிதங்கள் மிகச் சுத்தமாயிருக்கின்றன.

6. ராம்பூர்வா ஸ்தம்பம். இந்த ஸ்தம்பத்திலுள்ள லிகிதங்கள் சுமாராக வாசிக்கக்கூடியனவாம். இவ்வூரில் லிகிதம் ஒன்று மில்லாத ஸ்தம்பமும் ஒன்றிருக்கின்றது. இதுவும் அசோகனுடைய வேலைப்பாடென்று அனுமானிக்கப்படுகிறது.

கடைசியாகக் கூறப்பட்ட மூன்று ஊர்களும் பீகார் மாகாணத்தில் சாம்பரான் ஜில்லாவிலுள்ளவை, ஊர்கள் ஒன்றுக்கொன்று சமீபமாக உள்ளவையே.

ஏழாவது ஸ்தம்ப சாஸனத்துக்கு ஒரே பிரதிதான் கிடைத்திருக்கிறது. முதலாவது கூறப்பட்ட டில்லி தோப்ரா ஸ்தம்பத்தில் இந்த விகிதம் மற்ற ஆறு லிகிதங்களின் முடிவில் வரையப்பட்டிருக்கிறது. இது மற்ற எல்லா அசோக லிகிதங்களையும் விட நீண்டது ; இதைப் பத்து பிரத்தியேக சாஸனங்களின் தொகுதியென்றும் கூறலாம்.

9