உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அசோகனுடைய சாஸனங்கள்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

6

அசோகனுடைய சாஸனங்கள்

களிலும் பாறைகளிலும் வெட்டப்பட்டிருந்த லிகிதங்களில் த்விபாஷை நாணயங்களில் காணப்படும் இந்திய லிபிகளே உபயோகப் படுத்தப்பட்டிருப்பது பின்பு தெரியவந்தது. பழைய கல்வெட்டுக்களை வாசித்து அறிந்துகொள்ளப் பிரின்செப்பின் பட்டிகை மிகுந்த பிரயோஜனமாயிற்று. ஆயினும் லிகிதங்களின் கருத்து விளங்குவது அதிகக் கஷ்டமாயிருந்தது.

அசோகனது சாஸனங்களைப்படிக்க முயன்றவரில் முதல்வரும் இந்த ப்ரின்ஸெப் தான். ஆங்கிலமொழியில் பிரசித்திபெற்ற “ராஜபுத்திர சரித்திரம்” எழுதிய கர்னல் டாட் (Colonel Tod) இவரைப் பின்பற்றி கிர்நார் என்ற இடத்திலுள்ள லிகிதங்களைப்படிக்க முயன்றார். முதலில் இந்த லிகிதங்களின் கருத்து ஒருவருக்கும் தென்படவில்லை. பியதஸி என்ற ஓர் அரசனால் எழுதப்பட்ட லிகிதங்கள் இவை என்று மட்டும் தெரியவந்தது. ஆனால் பல சமுசயங்கள் உண்டாயின. சில லிகிதங்களில், தேவானாம் - ப்ரியன் (= தேவர்களுக்குப் பிரியமானவன்) என்று அரசனின் விருது பெயராக உபயோகிக்கப்பட்டிருந்தது. மற்ற லிகிதங்களில் பியதஸி என்ற பெயர்மட்டுந்தான் காணப்பட்டது. வேறு லிகிதங்களில் பியதஸி என்ற பெயருக்கு ‘தேவானாம்பிரியன்’ என்ற பதம் விருதாக உபயோகப்பட்டிருந்தது. இவ் விவரங்களிலிருந்து பல கேள்விகள் பிறந்தன: இந்தப் பியதஸி எவர்? பியதஸி ஒருவரா பலரா? பியதஸி என்ற பெயர் சிறப்புப்பெயரா? அல்லது பொதுப்பெயரா? பியதஸியும் தேவானாம்பிரியம்னும் வெவ்வேறு மனிதர்களா, அல்லது இரண்டும் ஒரே மனிதனின் பெயரா? இப்படிப்பட்ட கேள்விகளுக்குக் சில வருஷங்களாக விடை கிடைக்கவில்லை.