உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அசோகனுடைய சாஸனங்கள்.pdf/176

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

164

அசோகனுடைய சாஸனங்கள்

1. வினய பிடகம்

பௌத்த பிக்ஷுக்களுடைய ஒழுக்க முறையையும் நித்திய நியமங்களையும் உரைக்கும் கிரந்தங்களின் தொகுதியாம். இப்பிடகத்தில் அடங்கிய நூல்கள் பின்வருமாறு:-


வினயத்தல் அடங்கிய  விவரங்கள்
நூல்களின் பெயர்

1. பாடிமோக்கம் பிக்ஷுக்கள் அனுஸரிக்க வேண்டிய 227
 விதிகள் கூறப்படுகின்றன,
 ஸுத்த விபங்க  பாடிமோக்கம் என்ற ஸுத்திரத்தின்
 ஒரு பழைய வியாக்கியானம். இஃது
 இருவகைப்படும்.
 A. பாராஜிக.  உரையின் முதற்பாகம், ஸங்கத்திலிருந்து
 விலக்குதலுக் குற்ற குற்றங்களைப்
 பற்றிக் கூறுவது.
 B. பாசித்திய  இரண்டாம்பாகம் பிராயச்சித்த நோன்பு
 களால் தீர்க்கக்கூடிய குற்றங்களைப்
 பற்றிக் கூறுவது.
2. கந்தக ஸங்கத்தில் பிரவேசித்தல், பிக்ஷுக்களின்
 ஊண், உடை முதலியவற்றைப் பற்றிக்
 கூறுவது.
 A. மஹாவர்கம்  இதன் பெரும்பகுதி 20.அத்
 B. சுல்லவர்கம்  இதன் சிறுபகுதி 12. அத்.
3. பரிவாரபாத அனுபந்தங்களும் சுருக்கமும், 25 அத்.

வினய பிடகத்தில் சாதாரணமாகத் தர்மபோதனைகள் இல்லாவிடினும் கௌதமர் போதிவிருக்ஷத்தின் அடியில் பலகாலம் வீற்றிருந்து தவஞ்செய்து, கடைசியில் பூர்ண ஞானத்தை அடைந்து, தமக்குக் கிடைத்த மிக அரிதான உண்மையை உலகத்துக்கு உரைத்து யாவரையும் ஈடேற்ற வேண்டுமென்ற எண்ணங் கொண்டு, காசியை நோக்கிச் சென்று, அங்கே முன்னொருகால் தமது சீடராயிருந்த ஐந்து துறவிகளைக் கண்டு, அவர்களுக்கு முதன் முதலாகத் தாம் கண்டெடுத்த தர்மத்தைப் போதித்த விவரங்கள் மஹாவர்கத்தில் கூறப்படுகின்றன.