பக்கம்:அசோகனுடைய சாஸனங்கள்.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பிரியதர்சி அரசன் கல்வெட்டுக்கள்

79

கிருதத்தையே அவர் எல்லாக் காரியங்களுக்கும் உபயோகித்தனர். அதனால் பௌத்தமதக்கிரந்தங்கள் பிராகிருத மொழியில் எழுதப்பட்டன. விரைவில் இம் மொழி இலக்கிய இலக்கணமுடைய ஒரு புதுப்பாஷையாயிற்று. இதை நாம் பாலி என்று சொல்லுவோம். இந்தப் பாலி பாஷை இப்போது இலங்கை பர்மா முதலிய பௌத்த தேசங்களில் தெய்வ பாஷையாகப் போற்றப்பட்டு வருகிறது. பாலி, ஸம்ஸ்கிருதத்துக்கு நெருங்கிய சம்பந்தமுடையது ; ஆனால் அசோக சாஸனங்களின் பாஷை ஸம்ஸ்கிருதத்துக்குப் பாலியைவிட நெருங்கிய சம்பந்தமுடைத்தா யிருக்கிறது. தமிழ் மொழியில் பிராகிருத மூலமாக வந்துள்ள சொற்கள் பல உண்டு.

அசோக லிகிதங்களின் பாஷை ஸம்ஸ்கிருதத்திலிருந்து 
இலக்கணக்
குறிப்பு

எவ்வித வேறுபாடு உடையது என்பதை விளக்குவது மிக உபயோகமா யிருப்பினும் இவ்விவரணம் ஒரு இலக்கண நூலாக முடியுமென்று அஞ்சி இக்குறிப்பைச் சுருக்கி எழுதுகிறோம்: சமீபத்தில் காலஞ்சென்ற ஸ்ரீபாண்டுரங்க தாமோதர குணே அவர்களால் எழுதப்பட்ட Introduction to Comparative Philology, (Poona, 1918) என்ற புஸ்தகத்தில் இவ்விஷயம் விளக்கப்பட்டிருக்கிறது. அதில் ஸம்ஸ்கிருதத்துக்கும் அசோக லிகிதங்களின் பாஷைக்கு முள்ள ஒற்றுமை வேற்றுமைகள் மூன்று வகையாகப் பிரித்துக் சாட்டப்பட்டிருக்கின்றன. I. சொற்களின் உச்சரிப்பில் ஏற்பட்டிருக்கும் வித்தியாசங்கள். அஃதாவது, சொற்களில் ஒலிகள் நீட்டப்பட்டிருத்தல், அல்லது சுருக்கப்பட்டிருத்தல், அல்லது மெய் எழுத்துக்களில் மாறுதல் முதலியன. II. வேற்றுமை உருபுகளிற் காணப்படும் வேறுபாடுகள். III. காலம் செயல் முதலியவற்றைக் காட்டும் பொருட்டு வினைசொற்களில் ஏற்படும் வித்தியாசங்கள். இவற்றிற்கு உதாரணங்கள் குறிப்புரைகளில் காணலாம்.

பாலிபாஷையைப் போலவே இந்த லிகிதங்களின் பாஷையி-