பக்கம்:அசோகர் கதைகள்.pdf/10

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

8

அசோகர் கதைகள்

தால் அம்மாவின் நோய் முற்றியது. ஐந்தாவது நாளே அவள் இறந்து போய்விட்டாள்.

அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அக்த இளைஞனைத் திட்டினர்கள். அவன்தான் தன் தாயைக் கொன்று விட்டான் என்று குற்றம் சாட்டினார்கள். அதன் பிறகும் தான் உழைத்துப் பிழைக்க வேண்டும் என்று அந்த இளைஞன் நினைக்கவேயில்லே. உறவினர்கள் வீடுகளுக்குச் சென்று ஒவ்வொரு வீட்டிலும் ஒவ்வொரு வேளையாகச் சாப்பிட்டுவந்தான். சில நாட்கள்வரை, உறவினர்கள் இரக்கப்பட்டுச் சோறு போட்டர்கள். பிறகு, அவர்கள் அவனைத் தங்கள் வீட்டு வாசற்படியையே மிதிக்கக் கூடாதென்று கூறி விரட்டி யடித்து விட்டார்கள்.

அதன் பிறகும் அந்தப் பையன் உழைத்துப் பொருள் பெற வேண்டுமென்று நினைக்கவில்லை. வீடுவீடாகப் போய்ப் பிச்சை எடுத்தான்.

பிச்சைக்குச் செல்லும்போது சில சமயம் ஏதாவதொரு வீட்டில் அவனுக்குச் சாப்பாடே போடுவார்கள். சில சமயம் ஒவ்வொரு வீட்டில் ஒரு கைப்பிடி சோறுதான் போடுவார்கள். பத்துப் பதினேந்து வீட்டில் பிச்சை யெடுத்த பிறகுதான் வயிற்றுக்குச் சோறு கிடைக்கும். சில சமயம் வீட்டுக்காரர்கள் "வராதே போ!" என்று விரட்டி யடிப்பார்கள்.

ஊர்ப் பெரியவர்கள் பேசிக் கொண்டிருந்ததைக் கேட்டுக் கொண்டிருந்தபோது அந்த இளைஞன் பிச்சைக்காரனாகத்தான் இருந்தான். அந்தப் பெரியவர்களிடம் ஏதாவது காசு பிச்சை கேட்கலாம் என்று சென்றவன்தான் அந்தப் பேச்சுக்களைக் கவனித்தான்.

அசோக மன்னர், பிறர் கவலையைப் போக்குபவர் என்று கேள்விப்பட்டவுடன் அவனுக்கு மனத்துக்குள்