பக்கம்:அசோகர் கதைகள்.pdf/19

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
கதை ஒன்று
17
 

டிருந்தது. ஆகவே, அவர் சொல்லை அவன் தலைமேற் கொண்டு, மறுநாள் அசோகரைப் பார்க்கக் கிளம்பினான்.

காலையில் எழுந்து குளித்து, நன்கு துவைத்து உலர வைத்த எளிய ஆடைகளை அணிந்து கொண்டு அவன் அரண்மனையை நோக்கிப் புறப்பட்டான்.

அரச வீதியுள் நுழைந்தபோது, யாராவது காவலாளிகள் தன்னை விரட்டுவார்களா என்று எதிர் பார்த்தான். யாரும் அவனே எதுவும் சொல்லவில்லை. காவலர்கள் சிலர் அங்கங்கே நின்றார்கள். சிலர் அங்குமிங்கும் போய்க் கொண்டிருந்தார்கள். யாரும் அவனைக் கவனிக்க வில்லை. கண்டாலும் நெருங்கி வந்து எதுவும் கேட்க வில்லை.

அரண்மனையை நெருங்கினான். கடைவாயிலில் இருந்த காவலர்களில் ஒருவன், "என்ன வேண்டும்?" என்று கேட்டான்.

"மாமன்னரைப் பார்க்க வேண்டும்!" என்று இளைஞன் கூறியவுடன், "இவனோடு செல்லுங்கள்” என்று ஒரு வீரனைக் காட்டினான்.

அந்த வீரன் இளைஞன் ஒரு மண்டபத்திற்கு அழைத்துச் சென்று அங்கிருந்த அதிகாரியிடம் ஒப்படைத்தான். அந்த அதிகாரி, பணிவும் கனிவும் கலந்த குரலில், "சற்று இங்கே அமர்ந்திருங்கள். மாமன்னர் வரும் நேரமாகி விட்டது" என்று கூறினார்.

இளைஞன் ஒர் இருக்கையில் அமர்ந்தான். அவ்வளவு பெரிய மண்டபத்தை அவன் அதற்கு முன் பார்த்ததில்லை. அவ்வளவு அழகிய கட்டிடத்தை அவன் முன்பு எங்கும் கண்டதில்லை. வியப்புணர்ச்சியுடன் அந்த மண்டபத்தை முற்றும் ஆராய்ந்தான். கீழே முற்றிலும் சலவைக் கற்கள்