பக்கம்:அசோகர் கதைகள்.pdf/56

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

54

அசோகர் கதைகள்

ஈசுவரநாதனின் மனப்போக்கையும் அவன் கொண்டிருந்த சுதந்திர எண்ணங்களையும் ஒற்றர்கள் மூலம் அசோகர் தெள்ளத் தெளிவாக அறிந்து வைத்திருந்தார். ஈசுவரநாதன் அதே எண்ணங்களுடன் மேலும் பெரியவனாக வளர்ந்து வந்தால், தன் பேரரசுக்கு எவ்வளவு சீர் குலைவு ஏற்படும் என்பதையும் அவர் கணக்கிட்டு வைத்திருந்தார். போரென்று எழுந்தால், ஈசுவரகாதன் பொடியாகிப் போவான் அசோகரின் மாபெரும் படைக்கு முன்னுல் என்பது உண்மைதான். ஆனால் போர் புரி தில்லை என்று உறுதி கொண்டிருந்த அசோகரை எதிர்த்து அந்த இளைஞன் கலகம் செய்தால் அது எத்தகைய தீய விளைவுகளை உண்டாக்கும்!

காசி இளவரசன் கலகம் செய்தான்; அசோகருடைய ஆட்சி கலகலத்துவிட்டது என்ற நிலை ஏற்பட்டால், மற்ற சிற்றரசர்களுக்கும், இதுவே எடுத்துக்காட்டாகி விடும். தாங்களும் காசி இளவரசனைப் பின்பற்றிச் சுதந்திரம் பெற ஆரம்பித்துவிடுவார்கள்.

இந்தச் சூழ்நிலை தன் பேரரசில் உருவாகாமல் தடுக்க வேண்டும் என்று அசோகர் முடிவு செய்திருந்தார். அதற்கு காசி இளவரசனுடைய மனம் மாறியாக வேண்டும். அந்த மாற்றம் அவன் உள்ளத்திலே தன்னை யறியாமலே நிகழ்ந்தாக வேண்டும். மாறுகிறோம் என்று அவன் சிறிதும் எண்ணிப் பாராத நிலையிலே மன மாற்றம் உண்டாக வேண்டும்.

இப்படித்தான் அசோகர் தம் இராஜ தந்திரத்தை நிறைவேற்ற எண்ணினார். ஈசுவரகாதன் சுதந்திர வெறி மட்டுமே கொண்டிருந்தவனாக இருந்திருந்தால், அசோக