பக்கம்:அஞ்சலி.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பூரணி 121

அடையாளங்கூடக் கண்டுக்காத வெத்துப் பார்வையை நினைக்கறப்போ—அட, இந்த உடம்பையா ராவுலே நான் இப்படி எனக்குச் சொந்தம் மாதிரித் தடவி இதுமேலே விழுந்தேன். இல்லே, இன்னிக்கு இனிமேலே இன்னிலிருந்து தொடக்கூடக் கூடாதுன்னு மனசை திடம் பண்ணிக்கிட்டு ராவுலே திரும்பிப்படுத்தாலும், செவுத்திலே பாம்பு வளிஞ்சு இறங்கற மாதிரி இருட்டிலே அந்தக் கை நீளமா தேடி வந்து, மேலே விழுந்து புடிச்சுத் தன் பக்கமா இழுக்கையிலே வைராக்கியம் எல்லாம் எங்கே பறந்தோடிப் போவுது?

“அந்த ஆளுடைய சுபாவமே அப்படின்னு நாளாவ ஆவ, கண்டுக்கறோம். ஆனால் கண்டுக்கற வரைக்கும் சொல்லு. ஆனா இந்தப் பூமிலே எல்லாமே நமக்குப் புரியுதா? ஆனா புரிஞ்சுதான் என்ன ஆவனும்? நமக்கு என்ன வேணும்? நம்மைத் தொட்டுத் தாலி கட்டின புருஷன் என் மானம் அவன் கையிலே, அவன் சுகம் என் கையிலே. மாலையிலே வந்தா அண்டாவிலே வெண்ணீரை விளாவி பகல் எல்லாம் உழைச்ச நோவு தீர உடம்புக்கு விட்டு, முதுவு தேச்சு, நடுவாசலில் கிண்ணியை வைச்சு ஆவி பறக்க முளிமுளியா சோறுவட்டி, அதுலே புளி மட்டா, காரம் மட்டா காச்சி ரசம் விட்டு கடிச்சுக்க கிச்சலித் துண்டைக் கிள்ளிப் போட்டு விசிறிக்கிட்டு நிக்கறத்தைவிட, நமக்கு வேறு என்னா தெரிஞ்சாவனும்? இந்த நினைப்பெல்லாம்கூட இப்போதான். அப்போ அதுக்குக்கூட பொழுது ஏது? .

“அப்பறம் ஒருநாள் வவுத்துலே வித்தை வாங்கிக் கிட்டோம்னு நிச்சயம் ஆன அப்புறம் அது நம்ம வவுத்துக் குள்ளேயே நமக்குப் புரியாமலே முளைச்சு முழுசு ஆகி வேளை வந்ததும் ஒருநாள் நம்மை விட்டுக் கழண்டு தானும் தனியா, ஒண்ணா, வீல்னு கத்திக்கிட்டு விளுந்தப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அஞ்சலி.pdf/131&oldid=1025519" இலிருந்து மீள்விக்கப்பட்டது