பக்கம்:அஞ்சலி.pdf/198

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

188 லா. ச. ராமாமிருதம்

நான் அசதியுடன் எட்டிப் பார்த்தேன். வெள்ளைக் காற்றாடி நிலையறுந்து பூமியை நோக்கி அந்தரடித்துக் கொண்டிருந்தது.

கண்ணெதிரில் மங்கலாய் ஒரு வெள்ளையுருவம் எழுந்தது. தோட்டத்தின் எல்லைகளை வேகமாய்க் கடந்துகொண்டிருந்தது.

“வால்மீகி! ! What is the matter?” அவள் கண்கள் பய வெறியில் சுழன்றன. சட்டென என்னைத் தாங்கிக் கொண்டாள்.

“வால்மீகீ, ஏன் அழுகிறாய்?”

“அழறேனா என்ன?” எனக்கே ஆச்சரியமாயிருந்தது. என் இமைகளைத் தொட்டபோது அவைகள் நனைந்திருந்தன.

“வால்மீகி, நீ அவசியம் டாக்டரைப் பார்க்க வேண்டும்.”

“Oh, it is nothing. காயத்ரீ—”

“என்ன?” மெய்யெனவே அவள் குரல் பரிவில் குழைந்தது.

“ஒன்றுமில்லை,”

இப்படித்தான், ஒன்றுமில்லை ஒன்றுமில்லை யென்று சொல்லவும் முடியாமல் சொல்லவும் தெரியாது. என்னது தான் என அறியவும் முடியாமல், ஆனால் அவஸ்தை மாத்திரம் பாட்டுக்கொண்டே ஒருநாள் பின் ஒருநாள்.

காற்றேயில்லாமல் மூச்சுத்திணறி, வேர்வை ஸ்னானமாய்க் கொட்டும் புழுக்க நாட்கள்.

நெஞ்சைச் சில்லெனக் கவ்வும் குளிர் காற்று வீசும் குளிர் நாட்கள்.

அல்லது காற்றிலே கனலைக் கக்கும் வெப்பநாட்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அஞ்சலி.pdf/198&oldid=1033492" இலிருந்து மீள்விக்கப்பட்டது