பக்கம்:அஞ்சலி.pdf/205

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

காயத்ரீ 195

அவள் ஏதோ முனகினாள். சரியாய்க் காதில் விழவில்லை. “நீ சொல்வது உனக்குத்தான் புரியும்” என்கிற தினுசில் ஒரு முனகல்.

வெளியில் அடைமழையாய்ப் பெய்துகொண்டிருந்தது.

“காயத்ரீ. உன்னைப் பிரிந்து ஒரு கணம்கூட என்னால் இருக்க முடிவதில்லை. நீ என்னை விட்டுப் போனதும் எனக்கு ஒரு திகில் பிடித்துக்கொண்டது. அதனால்தான் அப்படி உன்னிடம் ஆவலுடன் ஒடி வந்தேன்.”

“ஒ! அதுமாதிரியா? இப்போ கொஞ்சம் புரிகிறது—” மறுபடியும் அவள் விரல்கள் என் முகத்தைத் தொட்டன. “உன் முகத்துக்கு உன் மூக்குக் கொஞ்சம் பெரிதுதான்—”

அவள் கையை என் முகத்திலிருந்து தள்ளினேன் இப்போ புரிந்துகொண்டேன் என்றாயே!”

பெருமூச்செறிந்தாள். “நிஜம்மா சொல்லித்தான் ஆகணுமா?”

“ஆம்” என் தொண்டை ஏன் இப்படி வரள்கிறதோ?

“சொல்லித்தான் ஆகனுமோ?”

“ஆம் ஆம் ஆம்” நான் பொறுமையிழக்க ஆரம்பித்து விட்டேன்.

“வால்மீகி” — அவள் வார்த்தைகள் தயங்கித் தயங்கிப் புறப்பட்டன. நான் அவளிடம் வேண்டுவதை அவளும் சேர்ந்து தேடுவதேபோல், “வால்மீகி நான் தீர ஆலோசணை பண்ணி என் மனசை நன்றாய் அலசி அலசிப் பார்த்துச் சொல்லப்போனால்— சொல்லப் போனால்—”—நான் காத்துக்கொண்டிருந்தேன்.

“சொல்லப்போனால்—”

“டாண், டாண், டாண்!!!—”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அஞ்சலி.pdf/205&oldid=1033499" இலிருந்து மீள்விக்கப்பட்டது