பக்கம்:அஞ்சலி.pdf/218

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

208 லா. ச. ராமாமிருதம்

அடையாளம் கண்டுகிட்டேன். இன்னுங் கிட்டே வா, அப்புறம் தலை முழுவிக்கலாம்” என்று சொல்லிக் கொண்டே, என் உடலை ஒரு முறை அடையாளம் கண்டு கொள்வதுபோல் தடவினாள். கொடி கொடியாய் சுருங்கிப்போன அந்த விரல்கள் என்மேல் பட்டுத் தேடு கையில் எனக்கு வெறுப்பாய்க் குறுகுறுத்தது.

“உன் ஆத்தாளுக்கு நான்தான் பிரசவம் பண்ணினேன். அவள் உடம்பிலிருந்து உன்னை நான்தான் எடுத்தேன்.” -

“ஒ!” ஏதோ புரிந்துவிட்டமாதிரி தலையை ஆட்டினேன்.

“எனக்கு நொம்ப நொம்ப வயசாய்ப்போச்சு, இன்னிக்கோ நாளைக்கோ என்னிக்குன்னு தெரியாது. ஆனால் உங்கிட்டே நான் ஒண்னு சொல்லிட்டுப் போவணும்.”

இவள் எனக்கு சொல்ல என்ன இருக்கிறது?

“உன் ஆத்தாளுக்குக் கடைசிலே கெடுபிடியாய்ப் போச்சு. நீ வர வழியா வரல்லே. மார்மேலே ஏற ஆரம்பிச்சுட்டே, வேதனை பட்டுக்கிட்டிருந்தாலும் என் நெஞ்சிலே இருக்கிற கவலையை எப்படியோ கண்டுட்டுது.

“என்னடி ஆண்டாளு?”ன்னு என் கை மேலே தன் கையை வெச்சுக் கேட்டது.

“ஒண்னுமில்லே அம்மா”ன்னு ஏதோ மளுப்பினேன்.

“தைரியமா சொல்லு ஆண்டாளு எனக்குத் தெரிஞ்சுக்கணும்.”

“அம்மா உன் குழந்தை—உசிரோடே வெளிலே வராதுபோல் இருக்குது.”

“ஆ! என்ன?”... உன ஆத்தா துடிச்சுப்பூட்டா.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அஞ்சலி.pdf/218&oldid=1033507" இலிருந்து மீள்விக்கப்பட்டது