பக்கம்:அஞ்சலி.pdf/219

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

காயத்ரீ 209

“அம்மா, நீ வருத்தப்படறதுலே பிரயோசனமில்லே. ஆண்டவன் எப்போ ஒரு தடவை கொடுத்தானோ இன்னொண்ணு கொடுக்காம இருக்கமாட்டான்” என்னு தைரியம் சொன்னேன்.

“ஐயோ எனக்கு என் குழந்தை வேணுமே! எனக்கு என் குழந்தை வேணுமே!!”

“உன் ஆத்தாள் முகத்தை இப்போகூடப் பார்க்கறேன். உடனே என்னத்தையோ நினைச்சுக்கிட்டாப்போல அவசர அவசரமா கையிலிருக்கிற தங்க வளையலைக் கயட்டி, என் கையிலே வெச்சுப் பொத்தினாங்க.

“என்னாம்மா இது?” எனக்கு ஒண்ணும் புரியல்லே.

“ஆண்டாளு, என் குழந்தையை நீ உசிரோடு காப்பாத்திக் கொடுக்கணும். ஆண்டாளு இவனுக்கு நான் எப்படிக் காத்திருந்தேன் தெரியுமா? என் பேரைக் காப்பாத்தக் கடைசிலே வந்துாட்டான். அவனை நான் விட மாட்டேன்—”

“சின்ன உசிரு பெரிய உசிரு நான் பார்க்க வேணாமாம்மா?”

“என்னைப்பற்றி எனக்கு அக்கறை இல்லை” என்னாங்க உன் ஆத்தாள். “ஆண்டாளு, நீ என்னைப் பத்தி நினைக்காதே. என் குழந்தைக்கு உயிரைக் கொடு, ஆண்டாளு, உன்னை என் குலதெய்வமாக நினைப்பேன்” என்னு கையைக் கூப்பினாங்க. எனக்கு அழுகை வந்திருச்சு. “அதுமாதிரியெல்லாம் செய்யாதேம்மா”ன்னு கையைப் பிரிச்சுவிட்டேன்.

“பரவாயில்லே ஆண்டாளு”— உன் ஆத்தா கண்ணை மூடிக்கிட்டே சிரிச்சாங்க. கண்ணிலேருந்து மாலை மாலையாப் பெருகுது. “என் பிள்ளைய எப்படியும் நான் என் உசிரோடு பார்க்கமாட்டேன். ஆனால்”—என் கையைக்

அ.—14

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அஞ்சலி.pdf/219&oldid=1026491" இருந்து மீள்விக்கப்பட்டது